வாருங்கள்! சுவையான மேங்கோ பட்டர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.
சீசனல் பழ வகைகளில் ஒன்றான மாம்பழம் கோடைகாலத்தில் மட்டுமே பெரும்பாலும் கிடைக்கும். மாம்பழம் வைத்து சுவையான ஜூஸ், மில்க் ஷேக் ,ஸ்மூத்தி என்று பல வித பானங்கள் மட்டும் தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.
ஆனால் இன்று நாம் மாம்பழம் வைத்து சூப்பரான பட்டர் மசாலா ரெசிபியை செய்ய உள்ளோம். இதன் சுவை மிகவும் வித்தியாசமாக இருப்பதால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
வாருங்கள்! சுவையான மேங்கோ பட்டர் மசாலா ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவில்
காணலாம்.
தேவையான பொருட்கள்:
மாம்பழத்தை பொரிப்பதற்கு:
மாம்பழம் (விருப்பமான ரகம்) - 1
மைதா - ¼ கப்
கார்ன் பிளார்-2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா செய்வதற்கு:
பட்டர்- 2 ஸ்பூன்
முந்திரி - 10
வெங்காயம் - 1
தக்காளி - 2
கிராம்பு- 1
பட்டை- 1
ஏலக்காய் - 2
பிற பொருட்கள்:
வெண்ணெய் - தேவையான அளவு
காஷ்மீர் மிளகாய்த் தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
தனியா தூள்-1 ஸ்பூன்
சீரகத் தூள்- 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
பிரஷ் கிரீம் - 2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி -கையளவு
செய்முறை:
முதலில் மாம்பழத்தை தோல் சீவி ஒரே மாதிரியான அளவிலான துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அதே போன்று வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் பிளார், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையில் அரிந்து வைத்துள்ள மாம்பழத் துண்டுகளைப் போட்டு, பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில், ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.எண்ணெய் சூடான பின் அதில் பிரட்டி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில், மற்றொரு கடாய் வைத்து குடில் சிறிது பட்டர் சேர்த்து உருகிய பின்னர் கிராம்பு, பட்டை, ஏலக்காய் ஆகியவை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
அடுத்தாக அதில் முந்திரி சேர்த்து வறுத்துக் கொண்டு, பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இப்போது இந்த கலவையை ஆற வைத்துக் கொண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் பட்டர் சேர்த்து உருகிய பின் காஷ்மீர் மிளகாய்த் தூள் சேர்த்து பின் அரைத்து வைத்துள்ள பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்ததாக மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், தனியா தூள் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி விட வேண்டும்.
இப்போது மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வருவதை காணாலாம். அந்த நேரத்தில் பொரித்து வைத்துள்ள மாம்பழத் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும். அனைத்தும் ஒன்றாக இணைந்த பின்னர் கஸ்தூரி மேத்தி மற்றும் பிரஷ் கிரீம் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறினால் சுவையான 'மேங்கோ பட்டர் மசாலா' ரெடி.
அரிசி மற்றும் பருப்புகள் அதிக நாட்கள் கெட்டு போகாமல் இருக்க இந்த டிப்ஸ்கள பாலோ பண்ணுங்க!