வட இந்திய ஸ்டைலில் ஆரோக்கியமான "வெஜ் சப்ஜி" ! இப்படி செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க!

By Dinesh TG  |  First Published Dec 27, 2022, 8:06 PM IST

வாருங்கள்! ருசியான வெஜ் சப்ஜியை வீட்டில் ஈசியாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இன்று நாம் சப்பாத்தி மற்றும் புல்கா போன்றவற்றிக்கு சைட் டிஷ்ஸாக வைத்து சாப்பிட ஒரு அட்டகாசமான சப்ஜியை செய்ய உள்ளோம். இதில் அனைத்து காய்கறிகளும் சேர்த்து செய்வதால் செய்யப்படுவதால் இது சத்தானது மற்றும் ஆரோக்கியமானது . 

மேலும் இது அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு ரெசிபி ஆகும். வீட்டில் இருக்கின்ற எல்லா காய்கறிகளையும் சேர்த்து செய்வதால் சுவையோ அலாதியாக இருக்கும். வழக்கமாக நாம் வெஜ் குருமாவில் தேங்காய் பால் சேர்த்து செய்வதில் இருந்து இதன் சுவை மாறுபட்டு இருக்கும். 

Tap to resize

Latest Videos

வாருங்கள்! ருசியான வெஜ் சப்ஜியை வீட்டில் ஈசியாக எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்: 

பன்னீர் - 150 கிராம்
காலிஃபிளவர் -1/2 கப் 
உருளைக்கிழங்கு - 1 
கேப்ஸிகம் - 1/2 
கேரட் - 1 
பீன்ஸ் - 5
வெங்காயம் - 3
தக்காளி - 4 
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
சீரகம் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
கஸ்தூரி மேத்தி - கையளவு 
பிரெஷ் கிரீம் - 1/2 கப்
பட்டர்-2 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

வீட்ல பிரெட் இருந்தா போதும் .டேஸ்டான வடையை சட்டென்று செய்து விடலாம்

செய்முறை: 

முதலில் வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், கேப்ஸிகம் போன்றவற்றை ஒரே மாதிரியான அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பன்னீரை ஒரே மாதிரியான அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். காலிஃபிளவரை அரிந்து அதனை சூடான தண்ணீரில் சேர்த்து 2 நிமிடங்கள் மட்டும் கொதிக்க வைத்து அதை தண்ணீர் இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றிக் கொண்டு பின் அதில் அரிந்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ,கேரட், பீன்ஸ், கேப்ஸிகம் ,காலிஃபிளவர் ஆகியவற்றை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி விட்டு பின் அதனை வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் மீண்டும் சிறிது பட்டர் சேர்த்து உருகிய பின்னர் அதில் வெட்டி வைத்துள்ள பன்னீர் சேர்த்து அது நன்கு பொன்னிறமாக மாறும் வரை வதக்கி அதையும் எடுத்து தனியே வைத்துக் கொள்ள வேண்டும் . 

அதே கடாயில் வெங்காயம்சேர்த்து வதக்கி விட்டு, அடுத்தாக இஞ்சி பூண்டுபேஸ்ட் சேர்த்து ,அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி சேர்த்து, தக்காளி மசியும் வரை வதக்கி விட்டு , கரம் மசாலா தூள் ,கஷ்மீரி மிளகாய் தூள்,தனியாத்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். 

பின் அதில் தனியாக எடுத்து வைத்துள்ள காய்கறி கலவை மற்றும் பன்னீர் சேர்த்து ஒரு முறை பிரட்டி விட்டு பின் அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 10 நிமிடங்கள் வரை தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கலவை கொதித்து கெட்டியாக மாறிய பிறகு, அதில் கஸ்தூரி மேத்தி சேர்த்து பின் இறுதியாக பிரெஷ் கிரீம் சேர்த்தால் சூப்பரான வெஜ் சப்ஜி ரெடி!

click me!