விடுமுறை கொண்டாட்டம்! குழந்தைகளுக்கு பால் - இப்படி செய்து கொடுங்க. மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

By Dinesh TG  |  First Published Dec 27, 2022, 3:03 PM IST

வாருங்கள்! ருசியான மில்க் புட்டிங் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


தமிழகத்தில் இருக்கும் எல்லா பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள குழந்தைகள் சாப்பிட ஏதாவது புதுமையாக செய்து தர வேண்டும் என்று கேட்கிறார்களா?அப்போ அவர்களுக்கு இந்த ஸ்வீட்டினை செய்து கொடுங்க. வீட்டில் உள்ள பொருட்களை மட்டும் வைத்து,குறைந்த நேரத்தில் மிகவும் சுவையாக இருக்கும் ஸ்வீட் ரெசிபியை தான் இன்று நாம் காண உள்ளோம். 

வழக்கமாக பால் வைத்து பாயசம், பால் கோவா போன்றவை தான் அதிகம் செய்து இருப்போம். இன்று நாம் கொஞ்சம் வித்தியாசமாக பால் வைத்து சூப்பரான சுவையில் மில்க் புட்டிங் செய்ய உள்ளோம். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை இருக்கும். 

Tap to resize

Latest Videos

வாருங்கள்! ருசியான மில்க் புட்டிங் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
பால் - 1 கப்
சர்க்கரை - 5 ஸ்பூன்
பாதாம்-10 
பிஸ்தா - 10
ஏலக்காய்த்தூள்-2 சிட்டிகை 

பூரியை கொஞ்சம் வித்தியாசமாக இப்படி செய்து பாருங்க!

செய்முறை:

முதலில் பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று சர்க்கரையை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து அதில் பால் ஊற்றி காய்த்துக் கொண்டு, பான் ஐ அடுப்பில் இருந்து இறக்கி பின் அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். இப்போது முட்டை உள்ள பௌலில் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் பொடித்த சர்க்கரை சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது ஐந்தில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பின் அதனை வேறொரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். 

அடுப்பில் ஒரு இட்லி பாத்திரம் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதன் மேல் 1 ஸ்டாண்ட் வைத்து ஸ்டாண்டின் மேல் கலவை ஊற்றிய கிண்ணத்தை வைத்து மூடி சுமார் 15 நிமிடங்கள் வரை வைத்து, தீயினை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். பின் அடுப்பில் இருந்து இறக்கி, ஆறிய பிறகு, அதில் பொடித்த பாதாம், பிஸ்தா தூவி விட வேண்டும். இதனை பிரிட்ஜில் 1 மணி நேரம் வரை வைத்து எடுத்து பின் விருப்பமான வடிவத்தில் வெட்டி பரிமாறினால் ருசியான மில்க் புட்டிங் ரெடி!

ஒருமுறை செய்து கொடுங்கள்.பின் இதனை அடிக்கடி செய்து தருமாறு குழந்தைகள் கூறுவார்கள்.

click me!