நாண் என்பது ஒரு வகையான ரொட்டி தான்.இது மைதா மாவினால் செய்யப்படும் ஒரு ரெசிபி ஆகும். இது பெரும்பாலும் ரெஸ்டாரன்ட்களில் கிடைக்கும் ரொட்டி ஆகும்.
ரெஸ்டாரண்ட் என்றாலே விலை சற்று அதிகமாக தான் இருக்கும்.
பிளைன் நாண்,பட்டர் நாண், தந்தூரி நாண், கார்லிக் நாண்,பன்னீர் நாண் என்று நாணின் வகைகள் நீண்டு கொண்டே செல்லும். நாண் வகைகளில் ஒன்றான வெஜிடேபிள் பட்டர் நாண் எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
நாண் போன்ற உணவு வகைகளை நாம் பெரும்பாலும் வீட்டில் செய்து பார்த்திருக்க மாட்டோம். எந்த வகை நாண் செய்ய வேண்டும் என்றாலும் தந்தூரி அடுப்பு முக்கியம்.அதில் செய்யும் பொழுது நாணின் சுவை கூடுதலாக இருக்கும். தந்தூரி அடுப்பு இல்லையென்றால், தோசைக்கல்லில் போட்டு சுட்டெடுக்கலாம்.
undefined
இதற்கு வெஜ் கிரேவி, சிக்கன் கிரேவி, மஷ்ரூம் கிரேவி என்று எதை வைத்தும் தொட்டு சாப்பிடலாம்.சுவையாக இருக்கும் வெஜிடேபிள் பட்டர் நாண்! எப்படி செய்வது? என்று பார்க்கலாம் வாங்க!
வீட்டிலேயே செய்யலாம் - கோல்ட் காபி !
தேவையான பொருட்கள்:
பால் 100 மில்லி
சர்க்கரை 1 ஸ்பூன்
ஈஸ்ட் 1 ஸ்பூன்
1 கப் மைதா மாவு
2 ஸ்பூன் துருவிய கேரட்
2 ஸ்பூன் குடை மிளகாய்
2 ஸ்பூன் ஸ்வீட் கார்ன்
1 ஸ்பூன் பட்டர்
1/2 ஸ்பூன் உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை சுமார் ஐந்து நிமிடம் ஒரு மூடி போட்டு மூடி வைக்க வேண்டும்.பிறகு அதனுடன் மைதா மாவு , கேரட், குடை மிளகாய், ஸ்வீட் கார்ன்,பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். மாவின் மேற்பரப்பில் சிறிது எண்ணெய் தெளித்து ஒரு மூடி போட்டு 1 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
மைசூரின் மதூர் வடை! செய்யலாம் வாங்க!
ஒரு மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் மாவு உப்பி இருப்பதை பார்க்க முடியும். இப்போது மீண்டும் மாவினை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். பின் சிறிது மாவு எடுத்து உருட்டி சப்பாத்தி போல் வட்ட வடிவில் தேய்த்து (சற்று தடிமனாக தேய்த்து) எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் சப்பாத்திக் கல் வைத்து ,கல் சூடானவுடன் தேய்த்து வைத்துள்ள நாணை போட்டு தீயை மிதமாக வைத்து, சிறிது பட்டர் சேர்த்து ஒரு புறம் சுட்டு எடுத்து விட்டு பின் திருப்பி போட்டு மறுபுறம் சிறிது பட்டர் சேர்த்து சுட்டு எடுக்க வேண்டும்.நம்மால் நாண் உப்புவதை காண முடியும்.அவ்ளோ தாங்க சூப்பரான கலர்புள்ளான பட்டர் நாண் ரெடி!