Madurai Kari Dosa : மணக்கும் மதுரை கறி தோசை!

By Dinesh TGFirst Published Oct 2, 2022, 12:48 PM IST
Highlights

மதுரை என்றவுடன் நாம் அனைவருக்கும் தெரிந்தது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில், அடுத்ததாக மதுரை பேமஸ் ஜிகர்தண்டா மற்றும் மதுரை மல்லி.அந்த வரிசையில் மதுரை கறி தோசையும் மிக பிரபலமான ஒன்றாகும். இதன் ருசியே அலாதியாக இருக்கும். இதனை சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வது என்று இந்த பதிவில் காணலாம். 

ஆட்டுக் கறியில் புரோட்டீன்,அமினோ அமிலங்கள்,கோலைன், நல்ல கொழுப்புக்கள், கனிமச்சத்துக்களான பாஸ்பரஸ், மாங்கனீசு,இரும்புச்சத்து, ஜிங்க், கால்சியம், காப்பர் போன்றவைகள் அதிக அளவில் உள்ளன.மேலும் எலக்ட்ரோலைட்டுகளான சோடியம், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன .இதனால் ஆட்டிறைச்சியானது, நமது உடம்பில் உள்ள அனைத்து பாகத்திற்கும் ஆரோக்கிய பயனை தருகிறது. 

கறிதோசை செய்ய தேவையான பொருட்கள்:

200 கிராம்-மட்டன் கொத்து கறி 
3-முட்டை
1- வெங்காயம் 
1-தக்காளி
1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டுபேஸ்ட்
1 ஸ்பூன் -மிளகு தூள் 
1/2 ஸ்பூன்- மிளகாய் தூள்
1/2 ஸ்பூன்- கரம் மசாலா
1/2 ஸ்பூன்- மல்லி தூள்
1/2 ஸ்பூன் சீரக தூள் 
1/4 ஸ்பூன் -மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன்-சோம்பு
1/2 ஸ்பூன்- கடுகு
தேவையான அளவு உப்பு 
தேவையான அளவு எண்ணெய் 

செய்முறை:

மட்டனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து குக்கரில் 5 விசில் வரும் வரை வேக வைக்கவேண்டும்.பின் முட்டையை அடித்துக் கொண்டு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்துநன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன் கடுகு மற்றும் சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

பின் அதனுடன் சிறிது வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு தக்காளி சேர்த்து , தக்காளி மசியும் வரை வதக்க வேண்டும்.பின் மஞ்சள் தூள், மல்லி தூள்,கரம் மசாலா தூள்,மிளகாய் தூள்,சீரக தூள் சேர்த்து பிரட்டி எடுக்க வேண்டும்.அதனுடன் வேக வைத்த கறியை தண்ணீரோடு சேர்த்து நீர் வற்றி கெட்டியாக வரும் வரை அடுப்பில் கொதிக்க விட வேண்டும். 

வீட்டில் அவல் இருக்கா? அப்போ காலை ப்ரேக் பாஸ்ட்டுக்கு இப்படி பண்ணி பாருங்க.

அடுப்பை சிம்மில் வைத்து தோசைக்கல்லில் மாவை எடுத்து சிறிய ஊத்தப்பம் ஒன்றை ஊற்றவும்.சிறிது வெந்ததும் ஒரு கரண்டி முட்டையை ஊற்றி, பின் அதற்கு மேல் ஒரு கரண்டி கறியை வைத்து ஸ்பிரட் செய்து விட வேண்டும்.அதன் மேல் சிறிது மிளகு தூள் தூவிவிட்டு சுற்றி எண்ணெய் விட்டு திருப்பி போட்டு தோசையை அழுத்தி விடவும்..

ஒரு நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான, சூப்பரான மதுரை கறி தோசை ரெடி!இதற்கு தொட்டு கொள்ள எதுவும் இல்லாமல் . காரசாரமாக அப்படியே சாப்பிடலாம். நீங்களும் கண்டிப்பா இந்த கறி தோசையை செய்து பாருங்க. அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

click me!