Vada kari : சுவையான சைதாப்பேட்டை ஸ்பெஷல் வடை கறி வீட்டிலேயே செய்வவோமா?

By Dinesh TG  |  First Published Oct 11, 2022, 1:08 PM IST

சென்னையில் வடைகறி மிகவும் பிரபலம், அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவாகும்.இது ஹோட்டல்களை விட தெருவோரம் விற்கும் தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.


சென்னையில் வடைகறி மிகவும் பிரபலம், அதிலும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், சைதாப்பேட்டையில் மிகவும் புகழ் பெற்ற உணவாகும்.இது ஹோட்டல்களை விட தெருவோரம் விற்கும் தள்ளுவண்டி கடைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.இதனை தோசை, இட்லி மற்றும் சப்பாத்தி போன்றவைக்கும் தொட்டு கொண்டு சாப்பிடலாம். இதில் கடலைப்பருப்பு மற்றும் பிற மசாலாக்களை கொண்டு செய்யப்படுவதால் இதன் ருசி தனித்து இருக்கும். வாருங்கள். இன்றைய பதிவின் மூலம் சுவையான சைதாப்பேட்டை வடை கறியை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

வடைகறி செய்ய தேவையான பொருட்கள்

Latest Videos

undefined

கடலைப்பருப்பு – 1 கப் 
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம்-2 
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 3 
பூண்டு-2 பல் 
வர மிளகாய் – 2 
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1ஸ்பூன் 
புதினா – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு

கல்யாண வீட்டு அவியல்! வீட்டுல செய்யலாம் வாங்க!

பட்டை – 1 துண்டு
பிரிஞ்சி – 1 
சோம்பு – ½ ஸ்பூன் 
கிராம்பு – 5
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன் 
மல்லித்தூள் – ½ ஸ்பூன் 
கரம் மசாலா – ½ ஸ்பூன் 
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 3 ஸ்பூன் 
முந்திரிப் பருப்பு – 3
கசகசா – ½ ஸ்பூன் 

செய்முறை:

1 கப் கடலை பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில், பூண்டு, சின்ன வெங்காயம், வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றுடன் ஊற வைத்துள்ள கடலை பருப்பின் நீரை நன்றாக வடிகட்டி விட்டு சேர்த்துக் கொள்ளவும். 

தண்ணீர் சேர்க்காமல் வடை பதத்திற்கு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு, பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவையை சின்ன சின்ன உருண்டை போல் போட்டு, நன்கு பொன்னிறமாக மாறியபின் எண்ணையை நன்றாக வடித்து தனியே எடுத்து வைக்கவும்.

அடுத்து ஒரு Pan இல் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிறிது பிரிஞ்சி இலை, சோம்பு, கிராம்பு, சின்ன பட்டை ஆகியவற்றை சேர்த்து வறுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து கொள்ளவும்.

வெங்காயம் சிறிது வதங்கிய பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி விட வேண்டும். இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் வாடை செல்லும் வரை வதக்கி விட்டு பின் அதனுடன் பச்சை மிளகாய், கொஞ்சம் கொத்தமல்லி மற்றும் புதினா ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும் .

அடுத்து பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, தக்காளி நன்கு மசிந்த பின் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து வதக்கி விட்டு அதில் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கிக் கொள்ளவும்.

வெஜ்... நான் வெஜ்.... இரண்டிற்கும் சுவையான பிளைன் சால்னா! செய்வோமா?

பின்னர் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். கலவை கொதித்த பின் பொரித்து வைத்துள்ள வடைகளை சேர்த்து 4 நிமிடங்கள் வரை கொதிக்கவிடவும்.

அடுத்து மிக்ஸி ஜாரில் முந்திரி பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் கசகசா சேர்த்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து மை போல் அரைத்துக் கொள்ளவும்.

இப்போது அரைத்த தேங்காயை கலவையுடன் சேர்த்து 1 நிமிடம் கொதிக்க வைத்து விட்டு ,அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி அடுப்பை அணைத்து விடவும்.
 

click me!