இந்த பாத்திரத்தில் தண்ணீரை சேமித்தால் உடலுக்கு நன்மை பெருகும்..!

By Dinesh TG  |  First Published Oct 11, 2022, 12:49 PM IST

ஒரு சிலர் எவர் சில்வர் வடிவிலான பிளாஸ்க், செம்பு வார்ட்டர் பாட்டில்கள் மற்றும் மண் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் சேமிக்கின்றனர். ஆனால் எந்த பாத்திரத்தில் தண்ணீர் சேமித்து வைப்பது நல்லது என்கிற குழப்பம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக தெளிவான விளக்கங்களுடன், அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் தண்ணீர் சேமித்து வைப்பதில் உள்ள நன்மைகளை அறிந்துகொள்வோம்.


மக்கள் அதிகம் பேர் தண்ணீரை முறையாக குடிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டை பெரும்பாலான மருத்துவர்கள் முன்வைக்கின்றனர். அதனால் நாம் அனைவரும் தண்ணீர் குடிப்பது மிகவும் முக்கியமாகியுள்ளது. பழங்காலங்களில் தண்ணீரை பானையில் சேமித்து வைத்தனர். அதை தொடர்ந்து இரும்புப் பாத்திரங்கள், செம்புப் பாத்திரங்கள், எவர் சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்கும் பழகத்துக்கு அடுத்தடுத்து மாறினோம். ஆனால் இப்போது பெரும்பான்மையாக நாம் பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குடங்களில் தண்ணீரை சேமித்து வைக்கிறோம். ஒரு சிலர் எவர் சில்வர் வடிவிலான பிளாஸ்க், செம்பு வார்ட்டர் பாட்டில்கள் மற்றும் மண் வாட்டர் பாட்டில்களில் தண்ணீர் சேமிக்கின்றனர். ஆனால் எந்த பாத்திரத்தில் தண்ணீர் சேமித்து வைப்பது நல்லது என்கிற குழப்பம் ஏற்படுகிறது. இதுதொடர்பாக தெளிவான விளக்கங்களுடன், அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் தண்ணீர் சேமித்து வைப்பதில் உள்ள நன்மைகளை அறிந்துகொள்வோம்.

களிமண் பாத்திரங்களில் சேமிக்கப்படும் தண்ணீர்

Tap to resize

Latest Videos

காலங்காலங்கமாக நாம் பயன்படுத்தி வரும் பொருள் தான் மண் பானை. மிகவும் குளிர்ச்சியாக இல்லாமலும், ரொம்பவும் சூடாக இல்லாமலும் இதமான ஜில்லென்ற உணர்வ் மண் பானை தண்ணீரை குடிக்கும் போது ஏற்படும். இதில் சேமிக்க வைக்கப்படும் தண்ணீரை குடிப்பதில் எந்த பிரச்னையும் கிடையாது. முழுக்க முழுக்க பாதுகாப்பானது தான். ஆனால் இதனால் கூடுதல் நன்மைகள் கிடைப்பதாக கூறப்படும் செய்திகளுக்கு எந்தவிதமான அறிவியல்பூர்வமான ஆதாரங்களும் இல்லை. தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும், தாகம் எடுக்கும் போது குடித்தால் இயற்கையாக இருக்கும்.

குளிர்காலம் துவங்கிவிட்டால் குதிகால் வெடிப்பு பிரச்னையும் பின்னாடியே வந்துவிடும்- என்ன செய்யலாம்..??

செம்பில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர்

இன்றைய காலத்தில் செம்பில் செய்யப்பட்ட வாட்டர் பாட்டில்களில் தண்ணீரை சேமித்து குடிக்கும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதற்கு காரணம் செம்புடன் கூடிய தண்ணீரை குடித்தால் உடலுக்கு பல்வேறு வகையில் நன்மை என்று கூறப்படுகிறது. ஆனால் இப்படி குடிப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. செம்பு பாத்திரம் நிறம் மாறுகையில் அதை சுத்தம் செய்வது முக்கியம். அப்படியே தண்ணீர் சேமித்து குடித்தால், உடலுக்கு பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். ஆனால் அறிவியல்பூர்வமாக பேசினால், செம்பு பற்றாக்குறையால் ஏற்படக்கூடிய நோய் பாதிப்பு எதுவும் நமது உடலில் இல்லை. மிக மிக அரிதாக மட்டுமே அதுபோன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. 

இஞ்சி சொல்லும் இனிய செய்தி..!! ஆண்களுக்கு இனிக்கும் பாலியல் வாழ்கை..!!

எவர் சில்வர் பாத்திரங்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர்

எவர் சில்வர் பாத்திரங்கள் அல்லது பாட்டில்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை குடித்து வருவதில் எந்தவிதமான பாதிப்பு அல்லது பயன்பாடு எதுவும் இல்லை. இதை தாராளமாக பயன்படுத்தலாம். எவர் சில்வர் பாத்திரங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் பெரிய பலன் என்பது துருபிடிக்காது, சீக்கரம் அழுக்குப் பிடிக்காது. அதேபோல இதை பராமரிப்பதற்கும் எளிதானது. எளிதாக கழுவிடலாம் மற்றும் கழுவாமல் கூட இருந்து தண்ணீரை பயன்படுத்தி வரலாம். ஆனால் முடிந்தவரை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் சோப்புகள் மற்றும் சோப் ஆயில்களில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என்பதை மட்டும் கொஞ்சம் சரிபார்த்துக் கொள்ளுங்கள். 

பிளாஸ்டிக்கில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர்

நெகிழிப் பொருட்களில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை குடிப்பது குறித்து பலருக்கும் கேள்வி உள்ளது. அதில் பிரதானமான ஒன்று, பிளாஸ்டிக் பொருட்களில் இருக்கும் தண்ணீரை குடித்தால் புற்றுநோய் வந்துவிடும் என்று அச்சமாகும். ஆனால் மருத்துவர்கள் இதை முற்றிலும் மறுக்கின்றனர். நாம் தினசரி தண்ணீரை குடிக்க பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் பாதிப்பில்லாதவை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது தண்ணீரை சேமித்து வைக்கும் பிளாஸ்டிக் பொருட்களில் PETE அல்லது HDPE என்கிற வேதியல் பொருட்கள் மட்டுமே உள்ளன. இதனால் மனித உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இவை கொண்டு செய்யப்பட்ட பொருட்களால் தண்ணீர் குடிப்பது முற்றிலும் பாதுகாப்பானது. 

பிளாஸ்டிக் பொருட்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பாட்டில்களை, நீங்கள் பலமுறை பயன்படுத்துவதிலும் எந்தவிதமான பிரச்னையும் கிடையாது. முடிந்தவரை சூடு செய்யாமல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீரை குடித்து வருவது நல்லது. 
 

click me!