Bonda : ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு மொறு மொறுவென உளுந்து போண்டா!

By Dinesh TG  |  First Published Sep 24, 2022, 5:23 PM IST

உளுந்தை வைத்து இட்லி, தோசை, களி , மெது வடை  மற்றும் அடை  செய்து இருப்போம். மொறு மொறுவான உளுந்து  போண்டா செய்யவோமா ? 


காலை டிபனுடன் அல்லது  ஈவினிங் ஸ்னாக்ஸ்க்கு இதனை  செய்யலாம். உளுந்தில் செய்யப்படுவதால் அதிக  நன்மைகளை கொண்டுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் ஏற்ற ஒரு ஸ்னாக்ஸ் தான் இந்த உளுந்து போண்டா!. உளுந்து ஆனது செரிமான அமைப்பை  பராமரிக்கவும், வயிற்றுப் போக்கைத் நிறுத்தவும் உதவுகிறது. சிறுநீரகம் சார்ந்த நோய்கள் நீங்க, உளுந்து ஊறிய நீரை தினமும் பருகலாம்.

Instant Dosa : தோசை மாவு அரைக்காமல் 10 நிமிடத்தில் தோசை ரெடி!

Latest Videos

undefined

தோல் நீக்கப்படாத உளுந்து எலும்புகளுக்கு பலத்தைக் கொடுக்கும். ‘எலும்புருக்கி’ நோய் தீரும் என்று நம்பப்படுகிறது.  முளைகட்டிய உளுந்து நீரிழிவுக்கு ஏற்றது. முளைகட்டிய உளுந்து மூட்டு வலிக்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது.  உடல் எடை அதிகரிக்க செய்யவும் உளுந்து பயப்படுகிறது. 

உளுந்து போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

உளுந்தம் பருப்பு- 1/2 காப் 

பச்அரிசி மாவு 3 ஸ்பூன் 

பச்சை மிளகாய் 3

கருவேப்பிலை ஒரு கொத்து 

எண்ணெய் 1/4 லிட்டர் 

உப்பு தேவையான அளவு 

மிளகாய் தூள்  1/ 2 ஸ்பூன் 

மிளகு தூள் -1/2 ஸ்பூன் 

பெருங்காயத்தூள் 1 சிட்டிகை

தேங்காய் துருவியது 2 ஸ்பூன் 

Chicken Urundai : சூப்பரான சிக்கன் உருண்டை குழம்பு!

செய்முறை:

உளுந்தை 1/2 மணி நேரம் ஊற வைத்து , தண்ணீரை வடி கட்டி கிரைண்டரில்  போட்டு  அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த மாவுடன் பச்சரிசி மாவு,  மிளகாய் தூள், மிளகு தூள்,   கருவேப்பிலை, பெருங்காய  தூள், தேங்காய் மற்றும் உப்பு  சேர்த்து  நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

பின் அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , எண்ணெய் நன்றாக காய்ந்த உடன் இந்த மாவினை சிறு உருண்டைகளாக போட்டு  பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுத்துக் கொள்ளவும். 

 அவ்ளோதாங்க  ஈஸியான , சுவையான மற்றும் ஆரோக்கியமான உளுந்து போண்டா ரெடி! இதை டொமட்டோசாஸ்  அல்லது தேங்காய் சட்னி யுடன் சாப்பிடலாம்.

click me!