ஆந்திரா ஸ்பெஷல் பருப்பு பொடி:

By Dinesh TG  |  First Published Sep 24, 2022, 4:40 PM IST


தினமும்   சாம்பார், குழம்பு என போர் அடிக்குதா? ஒரு மாற்றாக ஏதேனும் புதுசா, ஈஸியா  மற்றும் ஆரோக்கியமா செய்து சாப்பிடணும் போல் இருக்குதா?


சில நேரம் சமைக்க டைம் இல்லாம,  தயிர் சாதமும்  ஊறுகாயும்  கூட போதும் எனத்  தோன்றும். இப்படியான காலத்தில் உதவுவதற்காக்கவே  ஏற்படுத்தபட்டவை தான்  பொடி வகைகள்! இன்று நாம பார்க்க போறது ஆந்திரா ஸ்பெஷல் (கந்தி பப்பு ) பருப்பு பொடி தாங்க. 

ஆந்திராவில்  எந்த உணவகங்களுக்கு சென்றாலும்  வெஜ் மீல்ஸ் இந்த பருப்பு பொடியுடன் தான் ஆரம்பமாகும். வாங்க  ஆந்திராவின் கந்தி பப்பு பொடி எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.  கடலை பருப்பில் கால்சியம்  மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. இந்த இரண்டு தாது பொருட்களும், எலும்புகள் பலமாக இருக்கவும்,  நல்ல சத்தை பெறவும்,  உதவுகின்றன .

Latest Videos

undefined

மேலும்  கடலை பருப்பில் உள்ள , நார்ச்சத்து, பொட்டாசியம் குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு  நல்லது. துவரம் பருப்பில் அதிக புரதம் உள்ளது . இரத்த அழுத்தம் சீராக்க  ,ஆரோக்கியமான வளர்ச்சி ,உடல் எடை அதிகமாக  ,வீக்கம், அழற்சியை குறைக்க துவரம் பருப்பு பயன்படுகிறது.  

வாங்க! இப்போ இவ்வளவு  நன்மைகளை தரும் இந்த பருப்புகளை வைத்து பருப்பு பொடி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

பருப்பு பொடி செய்ய தேவையான பொருட்கள்:

150 கிராம் கப்   கடலைப் பருப்பு 

150 கிராம் துவரம் பருப்பு 

 10 காய்ந்த மிளகாய் 

 ஒரு டீஸ்பூன் சீரகம்

 ஒரு கைப்பிடி காய்ந்த கறிவேப்பிலை

சிறிது பெருங்காயம் - 

 தேவைக்கேற்ப உப்பு 

எண்ணெய் சிறிது 

செய்முறை: 

அடுப்பில்  pan  வைத்து எண்ணெய்  சேர்க்காமல் பருப்பு வகைகளை தனித்தனியாக நன்கு வாசம் வந்து சிவக்கும் வரை வறுத்து எடுக்கவும். பின்  சீரகத்தையும் pan  இல் எண்ணெய் சேர்க்காமல் வறுக்கவும்.  சிறிது எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயையும் ,கறிவேப்பிலையும் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும். 

Mutton Curry : கேட்டு வாங்கி சுவைக்க தூண்டும் கேரளா மட்டன் கறி!

சிறிது ஆற வைத்து  விட்டு, உப்பு சேர்த்து அனைத்தையும் அரைத்து எடுத்து கொள்ளவும் அவ்ளோதாங்க ஆந்திரா ஸ்பெஷல் கந்தி பப்பு பொடி  ரெடி!. சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு  இந்த கந்தி பப்பு பொடியை சேர்த்து பிசைந்து அப்பளத்துடன் சாப்பிட்டால் வேற லெவல் டேஸ்ட் தான் போங்க. 

click me!