கனிமச்சத்துக்களான ஜிங்க், காப்பர்,மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் , ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இது உடலுக்கு பல வகையில் நன்மையை தருகின்றன.
சரிங்க இப்போ நாம் கேட்டு வாங்கி சுவைக்க தோன்றும் கேரளா மட்டன் கறி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
அசைவம் என்றாலே முதல் இடம் பிடிப்பது மட்டன் என்கிற ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. ஆட்டின் அனைத்து உறுப்புகளும் ஒவ்வொரு விதத்தில் நமக்கு நன்மையை தருகிறது.
மட்டன் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை குணப்படுத்தலாம். குறிப்பாக கருத்தரிப்பதில் பிரச்சனை இருப்பவர்கள், விறைப்புத் தன்மை குறைபாடு உள்ளவர்கள் சிக்கனை தவிர்த்து மட்டனை சாப்பிடுவதே நல்லது. நம் உடல் வெப்பத்தை தனித்து, தோல் வலிமை அடையச் செய்து சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் ஆட்டிறைச்சியில் கோலைன், புரோட்டீன், அமினோ அமிலங்கள், வைட்டமின்களான பி1, பி2, பி3, பி9, பி12, ஈ, கே போன்ற சத்துக்கள் உள்ளன.
கனிமச்சத்துக்களான ஜிங்க், காப்பர்,மாங்கனீசு, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் , ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே இது உடலுக்கு பல வகையில் நன்மையை தருகின்றன. சரிங்க இப்போ நாம் கேட்டு வாங்கி சுவைக்க தோன்றும் கேரளா மட்டன் கறி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
மட்டனை ஊற வைப்பதற்கு :
!/4 கிலோ மட்டன்
1 ஸ்பூன் இஞ்ஜி பூண்டு விழுது
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1/2 ஸ்பூன் மிளகு தூள்
உப்பு தேவையான அளவு
மட்டன் கறி செய்ய
1 நறுக்கிய வெங்காயம்
1 நறுக்கிய தக்காளி
2 பச்சை மிளகாய்
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
1/2 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1/2 காப் தண்ணீர்
2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
மல்லி தழை கொஞ்சம்
உப்பு தேவையான அளவு
Milk : பெண்களுக்கான ஒரே வரப்பிரசாதம் - பருத்தி பால்! - எளிய செய்முறை!
வாங்க இப்போ செய்முறை பார்க்கலாம்
மட்டனை நன்கு அலசிய பின் ஊற வைக்க எடுத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 1 மணி நேரத்திற்கு பிறகு அடுப்பில் ஒரு குக்கர் வைத்து ஊற வைத்துள்ள மட்டனை குக்கரில் போட்டு மிதமான தீயில் வைத்து 6 முதல் 7 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.பின்பு அடுப்பை நிறுத்தி விட வேண்டும் .
அடுத்து ஒரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் காய்ந்த உடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதிக்க விட வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை செல்லும் வரை வதக்க வேண்டும்.
பின் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் வதக்கி விட வேண்டும்.அடுத்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விட வேண்டும்.சிறிது நீர் சேர்த்து வதக்கவும்.இந்த கலவையில் மட்டன் மற்றும் தண்ணீர் சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அவ்ளோதாங்க கேரளா ஸ்டைல் மட்டன் கறி தயார். இது சப்பாத்தி, ரொட்டி மற்றும் சாதத்திற்கு நல்ல சாய்ஸ் ஆக இருக்கும்.