Instant Dosa : தோசை மாவு அரைக்காமல் 10 நிமிடத்தில் தோசை ரெடி!

By Dinesh TGFirst Published Sep 23, 2022, 4:33 PM IST
Highlights

இன்ஸ்டன்ட் தோசை வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க. அது எப்படி 10 நிமிடத்தில் தோசை? அதுக்கு தான் இந்த மாதிரியான தோசை விதங்களையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து கொண்டு குறைந்த நேரத்தில் மாவை தயார் செய்து விடலாம்.

அரிசி மற்றும் உளுந்தை ஊற வைத்து, மாவு அரைத்து , புளிக்க செய்து, பிறகு அதை பக்குவமாக எடுத்து வைத்து, அப்பா! எவ்வளவு பெரிய ப்ராசஸ் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு ரொம்ப டயர்ட்டாக வந்து மாவு அரைத்து வைப்பது கொஞ்சம் சிரமமே.

இன்ஸ்டன்ட் தோசை வெறும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க. அது எப்படி 10 நிமிடத்தில் தோசை? அதுக்கு தான் இந்த மாதிரியான தோசை விதங்களையும் நாம் தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை வீட்டில் உள்ள சில பொருட்களை மட்டும் வைத்து கொண்டு குறைந்த நேரத்தில் மாவை தயார் செய்து விடலாம்.

ரவையில் நிறைந்துள்ள வைட்டமின் பி , வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் ரவையில் உள்ள பொட்டாசியம், நமது சிறுநீரகத்திற்கு நன்மையை தருகிறது. இது நமது சிறுநீரகத்தில் உள்ள செயல்பாட்டை விரிவாக்குகிறது.

கோதுமையை உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் மற்றும் நீரழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளலாம் .மேலும் இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த அழுத்தம் சீராக்கவும் கோதுமை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. சரிங்க இதற்கு தேவையான பொருட்களைப் பார்ப்போம் வாங்க.

Coconut Chutney : 2 டேபிள் ஸ்பூன் தேங்காயில் 5 பேருக்கு சட்னி செய்யலாம்!

தேவையான பொருட்கள்:

1 கப் ரவை

1/4 கப் கோதுமை மாவு

1 கப் தயிர்

பேக்கிங் சோடா 1 சிட்டிகை

செய்முறை:

ரவையை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் கோதுமை மாவையும் பின் தயிர், உப்பு மற்றும் சோடா மாவையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மாவை ரெடி செய்ய வேண்டும்.

Brain Protection : மூளையைப் பாதுகாக்க நாம் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!

10 நிமிடங்கள் கழித்து தோசை வார்த்தால் சுவையான சுலபமான மற்றும் ஆரோக்கியமான தோசை ரெடி!. இதற்கு தக்காளி சட்னி அல்லது கார சட்னியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் .

click me!