Coconut Chutney : 2 டேபிள் ஸ்பூன் தேங்காயில் 5 பேருக்கு சட்னி செய்யலாம்!

By Dinesh TGFirst Published Sep 22, 2022, 3:37 PM IST
Highlights

இந்த சட்னியை இட்லி, தோசை, வெண்பொங்கல் மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்.

தேங்காயின் மருத்துவ குணம்

கல்லீரல், இதயம் , சிறுநீரகக் குறைப்பாடுகளை களையக்கூடியது. அதிகமாக கால்சியம் பாஸ்பரஸ் நிறைந்துள்ளதால் எலும்புகளை வலுவூட்டுகிறது . ஆப்பிள் , வாழை பழம் பழங்களில் உள்ளதைவிட அதிகமான புரோட்டீன் இதில் உள்ளது. மேலும் மிகச் சிறந்த ரத்த சுத்திகரிப்புப் பண்டம் என்றும் தேங்காயையே கூறலாம்.

நாம் தேங்காயை பயன்படுத்தி தேங்காய் பால், தேங்காய் சாதம், தேங்காய் பர்பி என பல வகையான உணவுகளை செய்கிறோம் . சரிங்க குறைவான தேங்காயில் அதிக சுவை கொண்ட தேங்காய் சட்னி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

தேங்காய் 2 சில் (துருவியது)

பச்சை மிளகாய் 4

இஞ்சி சிறு துண்டு ( பொடியாக வெட்டியது)

வெங்காயம் 2 (மீடியம் சைஸ்)

பொரிகடலை 2 ஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு

தேவையான அளவு உப்பு

கடுகு 1/2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு 1/2 ஸ்பூன்

வர மிளகாய் 2

கருவேப்பிலை 1 கொத்து

பெருங்காயம் ஒரு சிட்டிகை

Seiya Puttu : சேமியா இருக்கா பத்தே நிமிடத்தில் காலை மாலை டிபன் ரெடி!

செய்முறை :

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்த பின் தோலுரித்த இஞ்சி துண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுப்பை நிறுத்தி விட்டு அந்த கலவையை ஆற வைக்க வேண்டும். ஆறி ய உடன் மிக்ஸி ஜாரில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்து அதனுடன் பொறிக்கடலை, சிறிது தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும்.

Dry Fruit Roll : சர்க்கரை சேர்க்காமல் ஸ்வீட் செய்வோமோ?

இப்போது ஒரு pan இல் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, வர மிளகாய் , கருவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளித்து சட்னியுடன் சேர்க்க வேண்டும். அவ்ளோதாங்க குறைவான தேங்காயில் தேங்காய் சட்னி ரெடி! நீங்களும் ஒரு முறை செய்து பாருங்க.

click me!