மரவள்ளிக் கிழங்கு அடை செய்வது எப்படி?

By Dinesh TGFirst Published Sep 21, 2022, 3:50 PM IST
Highlights

அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தில் துணை புரிகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது. மலச்சிக்கல், குடல் வலி, குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. சரிங்க இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள மரவள்ளிக் கிழங்கை வைத்து எப்படி அடை செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

மரவள்ளி கிழங்கில் கால்சியம் , விட்டமின் K, இரும்புச்சத்து ஆகியவை எலும்புகளின் பராமரிப்பில் பங்கு வகிக்கின்றன. அதிக ரத்த சிவப்பணுக்கள் இருப்பதால் அனீமியா போன்ற நோய்களை குணப்படுகிறது. இதில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளதால் உடல் எடையினை அதிகரிக்க விரும்புவோர் இதனை எடுத்துக் கொள்ளலாம்.

அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்தில் துணை புரிகிறது. மேலும் உடலில் உள்ள நச்சுக்களை கழிவாக வெளியேற்றுகிறது. மலச்சிக்கல், குடல் வலி, குடல் புற்றுநோய் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கிறது. சரிங்க இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ள மரவள்ளிக் கிழங்கை வைத்து எப்படி அடை செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

Almond Milk : ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் பாதாம் பால் டீ, காஃபி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

300 கிராம் இட்லி அரிசி

100 கிராம் துவரம் பருப்பு

1/2 கிலோ மரவள்ளிக் கிழங்கு

6 வரமிளகாய்

1 ஸ்பூன் சோம்பு

பூண்டு

2 வெங்காயம்

கருவேப்பிலை 2 கொத்து

மல்லி தழை

தேவையான அளவு உப்பு

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்

Fruit Desert : சமையல் அறைக்கு செல்லாமல் ஒரு ரெசிபி செய்வோமா?

செய்முறை :

இட்லி அரிசி , பருப்பு, சோம்பு, வர மிளகாய் ஆகியவற்றை சுமார் ஒரு 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

கிழங்கை நன்றாக அலசி பின் தோலுரித்து அதனை சீவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, மிளகாய் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது மரவள்ளிக் கிழங்கு , அரிசி , துவரம் பருப்பு மற்றும் சோம்பை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,சிறிது மஞ்சள் தூள், சிறிது பெருங்காய தூள், கருவேப்பிலை மற்றும் பொடியாக வெட்டிய மல்லி தழை யை சேர்த்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து சுமார் ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து தோசைக் கல்லில் மாவை ஊற்றி சுற்றி சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு திருப்பி போட்டால் சுவையான , ஆரோக்கியமான மரவள்ளிக் கிழங்கு அடை தயார் . நீங்களும் இதனை செய்து பாருங்க.

click me!