Dry Fruit Roll : சர்க்கரை சேர்க்காமல் ஸ்வீட் செய்வோமோ?

By Dinesh TG  |  First Published Sep 21, 2022, 9:44 AM IST

என்னங்க சர்க்கரை சேர்க்காமல் எப்படி ஸ்வீட் செய்ய முடியும்ன்னு கேட்கறீங்களா? செய்யலாம்ங்க . ஆல் இன் ஒன் ட்ரை ப்ரூட்ஸ் லட்டு தான் அந்த ஸ்வீட்.


வீட்டில் இருக்குற பல வகையான நட்ஸ் சேர்த்து இந்த ஸ்வீட்டை செய்யலாம்ங்க. பழங்களில் நிறைய சத்துக்கள் இருக்கின்றன என்று நமக்கு தெரியும். அதுப்போல உலர் பழங்களிலும் அதிக சத்துக்கள் உள்ளன. ஏனென்றால் உலர் பழங்கள் பழங்களில் இருந்து வருவதே ஆகும். இவை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் எடையை குறைக்கவும் துணையாக இருக்கும்.

குழந்தைகள் முதல் முதியர்வர்கள் வரைக்கும் ஏற்ற ஒரு ஸ்வீட் என்று கூட கூறலாம். குறிப்பாக வேலை செய்யும் போதோ அல்லது ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டும் என்று நினைக்கும் போதோ இந்த ட்ரை ப்ரூட்ஸ் லட்டு சாப்பிட்டால் எனர்ஜி கிடைக்கும். உலர்பழங்களை வைத்து இந்த ஸ்வீட் செய்வதால் நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். ஒரு துண்டு ஸ்வீட் சாப்பிட்டால் அனைத்து வகையான சத்துக்களும் கிடைத்து விடும்.

Latest Videos

இந்த ட்ரை ப்ரூட்ஸ் லட்டு சாப்பிடுவதால் தமனிகளில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து இரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுவதால் பக்க வாதம் வராமல் தடுக்கும். மேலும் மூளை வால்;வளர்ச்சிக்கும், நரம்பு அணுக்களை வளர்க்கவும், நினைவுத்திறனை மேம்ப்படுத்தவும் செய்கிறது.

இன்னும் பல வகையான நண்மைகளை உடலுக்கு தரும் இந்த ட்ரை ப்ரூட்ஸ் லட்டு எப்படி செய்யலாம் என்பதை இன்றைய பதிவில் பார்ப்போம் வாங்க.

தேவையான பொருட்கள்:

நெய் - 2 ஸ்பூன்

ஊற வைத்த பாதாம் 1/ 2 கப் (பொடியாக வெட்டியது )

முந்திரி 1/2 கப் (பொடியாக வெட்டியது )

வால்நட் 1/4 கப் (பொடியாக வெட்டியது )

பூசணி விதை 3 ஸ்பூன்

பிஸ்தா 3 ஸ்பூன்

சூரிய காந்தி விதை 2 ஸ்பூன்

பேரிச்சை 1 1/5 கப்

அத்தி பழம் 2 பொடியாக வெட்டியது

உலர் திராட்சை 2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி- 1/2 ஸ்பூன்

Golden Milk : நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் கோல்டன் மில்க்! தினமும் குடிச்சு ஆரோக்கியமாக இருங்க!

செய்யும் விதம்:

அடுப்பில் ஒரு ஒரு Pan வைத்து அதில் 2 ஸ்பூன் நெய் ஊற்றவும். நெய் காய்ந்த உடன் அதில் பாதாம் , முந்திரி, வால் நட், பூசணி விதை , பிஸ்தா மற்றும் சூரிய காந்தி விதை ஆகியவற்றை சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து மொறுமொறுவென வரும் வரை வறுக்கவும். அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Egg : பச்சை முட்டையை குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதா? கெட்டதா?

பின்பு ஒரு மிக்ஸி ஜாரில் பேரீச்சையை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு panஐ மிதமான சூட்டில் வைத்து சிறிது நெய் சேர்த்து அதில் அத்திப்பழம் , உலர் திராட்சை சேர்த்து வறுக்கவும். பின் அதனுடன் அரைத்த பேரிச்சயை சேர்த்து நான்கு மசித்து விட வேண்டும். அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக இணையும் வரை கிளறி விட வேண்டும். இப்போது வறுத்து எடுத்து வைத்துள்ள நட்ஸை சேர்க்கவும். இறுதியில் ஏலக்காய் பொடியை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து இந்த கலவையை நன்கு ஆர வைக்க வேண்டும். பின் ஒரு உங்களுக்கு பிடித்த வடிவமாக செய்து கொள்ளவும். ( சதுரமாக அல்லது வட்டமாக ) சுமார் எட்டு மணி நேரம் கழித்து இதனை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். அவ்ளோதாங்க. ஆரோக்கியமான மற்றும் சர்க்கரை இல்லாத ட்ரை ப்ரூட்ஸ் லட்டு ரெடி!

நீங்களும் அவசியம் ட்ரை பண்ணி பாருங்க.

click me!