Semiya Puttu : சேமியா இருக்கா பத்தே நிமிடத்தில் காலை மாலை டிபன் ரெடி!

By Dinesh TG  |  First Published Sep 21, 2022, 3:33 PM IST

சேமியாவை வைத்து உப்புமா செய்து இருப்போம் , கேசரி செய்து இருப்போம். ஆனால் சேமியா வைத்து புட்டு செய்து இருக்கீங்களா? அரிசி மாவு புட்டு , கோதுமை மாவு புட்டு மற்றும் ராகி மாவு புட்டு தான் தெரியும். இதென்ன! சேமியாவில் புட்டு என்று பாக்குறீங்களா?


தினமும் இட்லி,தோசை,பொங்கல் செய்து போர் அடிக்குதா? அப்போ இதனை செய்து பாருங்க.

சேமியாவை வைத்து உப்புமா செய்து இருப்போம் , கேசரி செய்து இருப்போம். ஆனால் சேமியா வைத்து புட்டு செய்து இருக்கீங்களா? அரிசி மாவு புட்டு , கோதுமை மாவு புட்டு மற்றும் ராகி மாவு புட்டு தான் தெரியும். இதென்ன! சேமியாவில் புட்டு என்று பாக்குறீங்களா?

Tap to resize

Latest Videos

ஆமாங்க இன்றைய பதிவில் நாம் சுவையான, சத்தான மற்றும் சுலபமான சேமியா புட்டு எப்படி செய்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்த மற்றும் சத்தான சேமியா புட்டு . ராகி சேமியா , அல்லது அரசி சேமியா எதை பயன் படுத்தினாலும் சுவை நன்றாக இருக்கும். நாம் இன்று ராகி சேமியாவை வைத்து புட்டு செய்ய போகிறோம்.

சேமியாவில் கொலஸ்ட்ரால் கம்மியாக உள்ளது . மேலும் இதில் மிகுந்த கார்போ ஹைட்ரேட் உள்ளது. சோடியத்தின் அளவும் குறைவாக உள்ளது. எளிதில் செரிமானம் ஆகும். சரிங்க. இதற்கு தேவையான பொருட்கள் என்ன வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

ராகி சேமியா 1 1/2 பாக்கெட்

நெய் 2 ஸ்பூன்

சர்க்கரை 5 ஸ்பூன்

அல்லது

நாட்டு சர்க்கரை 5 ஸ்பூன்

தேங்காய் துருவல் 4 ஸ்பூன்

2 கப் தண்ணீர்

உப்பு தேவையான அளவு

Saffron Water: குங்குமப்பூ தண்ணீரை குடிச்சிப் பாருங்க: ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்!

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கலக்கி விட வேண்டும். 1 1/2 பாக்கெட் சேமியாவை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு 2 நிமிடம் கழித்து ஒரு தட்டில் எதுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இல்லாமல் இருக்க வடிகட்டியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு அடுப்பில் ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடாக்க வேண்டும். இப்போது இட்லி தட்டின் மீது ஒரு காய்ந்த காட்டன் துணி வைத்து தட்டில் வைத்துள்ள சேமியாவை உதிர்த்து போடாவும். இவ்வாறு உதிர்த்து போடுவதால் சேமியா ஒட்டாமல் இருக்கும்.

blood pressure ; உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் இருக்கா? சரிசெய்ய இதை ட்ரை பன்னுங்க!

இந்த மாதிரி அனைத்து சேமியாவையும் இட்லி தட்டுகளின் மீது வைக்க வேண்டும். இட்லி பாத்திரத்தை மூடி வைத்து விட்டு 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் இட்லி பாத்திரத்தை திறந்து இட்லி தட்டில் உள்ள சேமியாவை வேறு ஒரு பாத்திரத்தில் சூடாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சிறிது நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் 5 ஸ்பூன் சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின் நன்றாக கிளறி விட வேண்டும். பின்பு தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவ்ளோதாங்க ரொம்ப ஈஸியான ஹெல்த்தியான சேமியா புட்டு ரெடி. நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

click me!