சிக்கன் கட்லெட், உருளை-பட்டாணி கட்லெட், நண்டு கட்லெட் என பல வகையான கட்லெட் இருந்தாலும் , இந்த சோயா கட்லெட்டின் சுவை சற்று கூடுதலாக இருக்கும். சோயா கட்லெட்! எப்படி செய்வது என்பதனை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சோயா கட்லட் எனப்படும் இதில் மீல் மேக்கர் மற்றும் உருளைக்கிழங்கு போன்றவற்றை சேர்த்து செய்யப் படும் சுவை மிக்க மாலை நேர ஸ்னாக்ஸ். இதனை பள்ளி முடித்து சோர்வாக வரும் குழந்தைகளுக்கு தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.மேலும் இது சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் காரணத்தினால் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
சிக்கன் கட்லெட், உருளை-பட்டாணி கட்லெட், நண்டு கட்லெட் என பல வகையான கட்லெட் இருந்தாலும் , இந்த சோயா கட்லெட்டின் சுவை சற்று கூடுதலாக இருக்கும். சோயா கட்லெட்! எப்படி செய்வது என்பதனை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
undefined
சோயா கட்லெட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
மீல் மேக்கர் – 1 கப் – 50g
வேக வைத்தஉருளைக்கிழங்கு – 2
பெரிய வெங்காயம் – 1
கேரட்-1 (துருவியது)
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
மைதா மாவு – 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
மல்லித்தூள் – ½ ஸ்பூன்
கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
மல்லி தழை – சிறிதளவு
பிரெட் கிரம் – தேவையான அளவு
சமையல் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
குட்டிஸ்க்கான சத்தான ராகி டிலைட் ரெசிபி!
செய்முறை:
ஒரு கிண்ணத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து , அதில் மீள் மேக்கர் சேர்த்து , சுமார் 10 நிமிடங்கள் வரை அதன் சூட்டிலேயே மீல்மேக்கரை வேக வைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரை நன்கு பிழிந்து மீல்மேக்கரை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ளவும்.
ஒரு Pan இல் சிறிது எண்ணெய் சேர்த்துக், எண்ணெய் சூடான பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து , வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் வதங்கிய பிறகு, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி , அதன் பச்சை வாசனை போன பின், மிளகாய் தூள் , மல்லித்தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
பின்னர் துருவிய கேரட்டை சேர்த்துக் கொண்டு, கேரட் வெந்த பின், அரைத்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்துகிளறி விட வேண்டும்.அதன் பின் வேக வைத்து எடுத்துள்ள உருளை கிழங்குகளை நன்றாக மசித்து சேர்த்து , நன்றாக கிளறி எடுத்து அதில் சிறிது மல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும்.
அனைவருக்குமான ஹெல்த்தி ஸ்னாக்ஸ் ''எள்ளுருண்டை''!.
தயாராக இருக்கும் மசாலாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி தட்டிக் கொள்ளவும். பின் கொஞ்சம் மைதா மாவில் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.இப்போது ரெடியாக உள்ள கட்லெட்டுகளை மைதா மாவில் டிப் செய்து பின் பிரெட் கிரம்சில் நன்றாக பிரட்டி எடுக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் , மிதமான தீயில் வைத்து கட்லெட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு இரண்டு பக்கமும் பொன்னிறமாக மாறும் வரை பொரித்து எடுக்கவும். சுவையான, சுட சுட சோயா கட்லட்!ரெடி! இதனை டொமேட்டோ கெட்சப் மற்றும் புதினா சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.