Bread Pizza : வீட்டிலேயே செய்யலாம் -பிரட் பீசா!

By Dinesh TG  |  First Published Oct 6, 2022, 2:26 PM IST

எந்த வகையான பீசா என்றாலும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.நமது விருப்பத்கேற்ற டாப்பிங்ஸ் சேர்த்துக் செய்யலாம். பீசாவை ஓவன் இல்லாமலும் செய்ய முடியும். சீஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியமான பீசா செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.


உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த மற்றும் விருப்பமான உணவு என்றால் அது நிச்சயம் பீசா தான். சிக்கன் பீசா, பன்னீர் பீசா, காய்கறி பீசா என்று இதில் பல வகைகள் உள்ளன. 

எந்த வகையான பீசா என்றாலும் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.நமது விருப்பத்கேற்ற டாப்பிங்ஸ் சேர்த்துக் செய்யலாம். பீசாவை ஓவன் இல்லாமலும் செய்ய முடியும். சீஸ் மற்றும் காய்கறிகள் சேர்த்து சுவையான மற்றும் ஆரோக்கியமான பீசா செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

Tap to resize

Latest Videos

பொதுவாக வெளிகளில் விற்கும் பீசாவில், மைதா மாவினை பயன்படுத்தி அதன் பேஸ் செய்வார்கள். வீட்டில் நாம் மைதா பேஸ் இல்லாமல், பிரட்டை பேஸ்ஸாக பயன்படுத்த உள்ளோம். இதற்கு பால் பிரட் அல்லது கோதுமை பிரட் எதையும் பயன்படுத்தலாம். பிரெட் பீசா செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதை பார்க்கலாம்.

டாப்பிங் செய்ய தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 1/4 கப் (நறுக்கியது)
தக்காளி – 1/4 கப் (நறுக்கியது)
சிவப்பு குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது)
சீஸ் – 1/4 கப் (துருவியது)
ஸ்வீட் கார்ன்- 1/4 கப் 
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன் 
சில்லி பிலேக்ஸ் – 1/2 ஸ்பூன் 
டொமேட்டோ சாஸ் – 1 ஸ்பூன் 
ஆலிவ் – 3 ஸ்பூன் 
உப்பு -தேவையான அளவு
Italian seasoning – 1/2 ஸ்பூன் 

காய்கறி பொரியல் தெரியும்? இது என்ன சிக்கன் பொரியல்?

பொருட்கள்:

பிரட் – 8 துண்டு 
பட்டர் – தேவையான அளவு
டொமேட்டோ கெட்சப் – தேவையான அளவு

செய்முறை

ஒரு கிண்ணத்தில் டாப்பிங் செய்வதற்கு தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு நன்றாக மிக்ஸ் செய்து தனியாக 
எடுத்து வைக்கவும். இரண்டு பிரட் துண்டுகளை எடுத்துக் கொண்டு, அதனை வட்ட வடிவில் வெட்டி எடுத்து கொண்டு மற்ற பாகத்தை அகற்றி விடவும்.

ஒரு பிரட் துண்டை மட்டும் எடுத்து மற்றொரு சிறிய வட்ட வடிவில் வெட்டி, நடு பகுதியை நீக்கி விட்டு ,மற்றொரு பிரெட் துண்டில் டொமெட்டோ சாஸ் தடவிஸ்ப்ரெட் செய்யவும்.

அனைவருக்குமான ஹெல்த்தி ஸ்னாக்ஸ் ''எள்ளுருண்டை''!.

வெட்டி எடுத்துள்ள பெரிய பிரட் துண்டை அதன் மீது வைக்கவும். டாப்பிங்கை ப்ரெட்டின் மேற்பரப்பில் வைத்து கொஞ்சம் அழுத்தி விடவும். அதன் மீது கொஞ்சம் உருகிய பட்டர்ரை ஸ்ப்ரெட் செய்யவும் .

ஓவன் இருந்தால் 180C/360F வெப்பத்தில் 10 நிமிடங்கள் வேக விடவும். இல்லையென்றால் தோசக் கல்லை நன்றாக சூடு படுத்திக் கொள்ள வேண்டும். தயாராக இருக்கும் பிரட் பீசாவை வைத்து தீயை சிம்மில் வைத்து சீஸ் உருகும் வரை மூடி வைக்கவும்.அவ்ளோதாங்க சுவையான, சுட சுட பிரெட் பீட்சா தயார்!

click me!