Weight Loss tips : வெயிட் லாஸ் செய்ய பெஸ்ட் சாய்ஸ் - சுரைக்காய் தோசை!

By Dinesh TG  |  First Published Oct 5, 2022, 1:54 PM IST

உடல் எடையை குறைக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் நீர்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை தொடர்ந்து நமது உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்கலாம். 


நம்மில் அதிகமானோர் உடல் எடையை குறைக்க பல நடை பயிற்சி உடற்பயிற்சிகள், மற்றும் செயற்கையான வழிமுறைகளை பின்பற்றியும் பெரிய பலன் கிடைப்பதில்லை. உடல் எடையை குறைக்க இயற்கையாக நமக்கு கிடைக்கும் நீர்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை தொடர்ந்து நமது உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்கலாம். 

அந்த வகையில் அதிக நீர் சத்துள்ள சுரைக்காய் வைத்து அரிசி சேர்க்காமல் சுரைக்காய் தோசை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

சின்ன வெங்காயம் -10
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 1/2 ஸ்பூன்.
தோலுரித்த பூண்டு – 3 பல்
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
கோதுமை மாவு – 1 கப்
ரவை – 1/4 கப்
கடலை மாவு – 1/4 கப்
தேங்காய் துருவல் – 1 டேபிள்ஸ்பூன் 
பெருங்காயம் – 2 சிட்டிகை
தேவையான அளவு உப்பு 

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஆலு மட்டர் ரெசிபி - வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!

செய்முறை:

சுரைக்காய் எடுத்து தோல் நீக்கி,பஞ்சு போல் இருக்கும் விதைகள அகற்றி ,சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொண்டு நன்றாக அலசி வைத்துக் கொள்ளுங்கள் .

மிக்சி ஜாரில் சுரக்காய் துண்டுகள் , சின்ன வெங்காயம் ,சீரகம், இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை சேர்த்து கால் கப் அளவு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.(ஒரு குழி கரண்டிளவு தண்ணீர் சேர்த்தாலே போதும்)

காய்கறி பொரியல் தெரியும்? இது என்ன சிக்கன் பொரியல்?

இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு ,ரவை, கடலை மாவு, தேங்காய் துருவல், பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, நன்றாக மிக்ஸ்செய்ய வேண்டும்.அடுத்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்துள்ள, விழுதை இதனுடன் சேர்த்து தன்னீர் சேர்க்காமல் கைகளைக் கொண்டு நன்றாக கிளறி விட வேண்டும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அடை தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும். 

இப்போது தோசைக்கல் சூடு ஆனவுடன், மிதமான தீயில், இந்த மாவை ஊற்றி அடை தோசையை வார்ப்பது போன்று வார்த்து எடுத்தால் போதும். சுட சுட சுரைக்காய் தோசை ரெடி!

click me!