ஆரோக்கியம் உள்ள உணவுகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, சத்துள்ள , சுவையான உணவை, பார்த்ததும் விரும்பி கேட்டு சாப்பிடத் தூண்டும் விதத்தில் கலர்ஃபுல்லான வகையில் செய்துகொடுக்க வேண்டும். அந்த விதத்தில் சத்துள்ள ராகி டிலைட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய கால கட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளை சாப்பிட வைப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஆரோக்கியம் உள்ள உணவுகளை சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு, சத்துள்ள , சுவையான உணவை, பார்த்ததும் விரும்பி கேட்டு சாப்பிடத் தூண்டும் விதத்தில் கலர்ஃபுல்லான வகையில் செய்துகொடுக்க வேண்டும். அந்த விதத்தில் சத்துள்ள ராகி டிலைட் ரெசிபி எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
ராகியின் மகத்துவம் :
ராகியானது சிறு தானிய வகையை சேர்ந்தது. இதில் மக்னிசியம், புரதம், நார்ச்சத்து போன்ற பல வகையான தாதுக்கள் உள்ளன. வளரும் குழந்தைகள் உடல் பலம் பெறவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் மிக சிறந்த உணவாக உள்ளது. ராகியினால் செய்யப்பட்ட உணவை எடுத்துக் கொள்வதால் அதிக உற்சாக மற்றும் எளிதில் உடல் சோர்வு அடையாமல் இருக்கும் நிலையை தருகிறது.
குட்டீஸ்கான ஹெல்தி ஸ்நாக்ஸ்! - ''கோதுமை பிஸ்கட'' செய்யலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு-1 கப்
முந்திரி-1/4 கப்
பாதாம்-1/4 கப்
பிஸ்தா -1/4 கப்
உடைத்த கடலை-1/4 கப்
வேர்க்கடலை-1/4 கப்
வெல்லம்,
நெய்- 2 ஸ்பூன்
கம கம வாசனையில் ஆளை தூக்கும் ஆம்பூர் பிரியாணி!
செய்முறை:
கடாயில் சிறிது நெய் சேர்த்து , ராகிமாவைச் சேர்த்து, நன்கு வாசனை வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதே கடாயில் பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம் , பிஸ்தா ,உடைத்த கடலை, வேர்க்கடலை சேர்த்து வறுக்க வேண்டும். இப்போது இதனுடன் வறுத்த மாவினை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
பின் 1 பாத்திரத்தில் வெல்லம் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, கரைந்த பின் இறக்கி வடிகட்டவும்.
பாகு ஆறிய பின் , வறுத்து எடுத்து வைத்துள்ள ராகி மாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும். பின் நெய்யை உருக்கி, மாவில் சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக பிசைந்து, சிறிய லட்டு போன்று பிடிக்கவும்.
இறுதியாக அதன் மேல் சாக்லேட் சாஸ் ஊற்றி அலங்கரிக்கவும். அவ்வளவு தான்! சத்தான ராகி டிலைட் ரெசிபி! ரெடி!!! குழந்தைகளின் கண்ணில் பட்ட அடுத்த நிமிடம் காலியாகி விடும். கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.