Egg 65 : சிக்கன் 65 தெரியும். முட்டை 65! தெரியுமா?

By Dinesh TG  |  First Published Oct 6, 2022, 1:00 PM IST

நாம் முட்டையை அவித்து, முட்டை பொரியல், குழம்பு என்று பல விதங்களில் சாப்பிட்டு இருப்போம். சிக்கன் 65, கோபி 65, மஷ்ரூம் 65 என பல விதமான 65 செய்து இருப்பீர்கள். முட்டை 65 ! சமைத்து சாப்பிட்டு இருக்கீங்களா? முட்டை 65 அல்லது எக் 65 எப்படி செய்யலாம் என்பதை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


முட்டையை கொண்டு இந்த மாதிரி காரசாரமாக முட்டை 65 செய்து தாருங்கள். தட்டு நிறைய வைத்து கொடுத்தாலும் ஒன்று கூட மிச்சம் இல்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள். முட்டை 65 செய்தால் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் அதன் சுவை இருக்கும்.மீண்டும் இதனை அடிக்கடி சுவைக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவிற்கு எக் 65 ரெசிபி இருக்கும். இதனை பார்ப்பதற்கும் மற்றும் ருசியிலும் சிக்கன் 65 போன்று இருக்கும். 

தேவையான பொருட்கள் :

Tap to resize

Latest Videos

முட்டை – 4 
சின்ன வெங்காயம் – 5 
சோம்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன் 
பூண்டு – 5 பல்

ரம்மியமான ரசகுல்லா செய்வது எப்படி?

மிளகாய் தூள் – 1ஸ்பூன்
சோள மாவு – 2 ஸ்பூன்
புட் கலர் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பில்லை – ஒரு கொத்து 
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணை – தேவையான அளவு 

செய்முறை:

முட்டைகளை வேக வைத்து விட்டு அதனை ஒரே மாதிரியான அளவில் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது முட்டையை இரண்டு துண்டுகளாக நீள வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும்.

சின்ன வெங்காயம், பூண்டு, மிளகாய் தூள் ,சோம்பு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுமை போன்று அரைத்து கொள்ள வேண்டும்.

பின்பு இதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் புட் கலர், சோள மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

டென்ஷனை நீக்கி புத்துணர்ச்சி தரும் மணமனக்கும் ''மசாலா டீ''!

இப்போது வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை மசாலாவில் நன்றாக தோய்த்து, ஒரு சுமார் 1/2 மணி நேரம் ஊற வைத்து விட்டு ,பின் ஒருகடாயில் நல்லெண்ணை சேர்த்து , எண்ணெய் காய்ந்ததும் முட்டை துண்டுகளை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான முட்டை 65 ரெடி!

click me!