வாருங்கள் ! பீர்க்கங்காய் வைத்து ருசியான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வழக்கமாக நாம் தினமும் சாப்பிடும் இட்லி,தோசை,சப்பாத்தி போன்றவைகளுக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் என்று தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இன்று நாம் பீர்க்கங்காய் வைத்து டேஸ்ட்டான சட்னியை காண உள்ளோம்.
பொதுவாக பீர்க்கங்காய் வைத்து கூட்டு,பொரியல் தான் அதிகமாக வீட்டில் செய்து இருப்போம். இன்று நாம் பீர்க்கங்காய் வைத்து சட்னி செய்து சாப்பிடலாம். இதனை இட்லி,தோசை, சப்பாத்தி போன்றவைகளுக்கு தொட்டு சாப்பிடலாம். மேலும் சாதத்திலும் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
வாருங்கள் ! ருசியான பீர்க்கங்காய் வைத்து சூப்பரான சட்னி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
undefined
தாளிக்க:
என்ன! நிலக்கடலை வைத்து குலோப் ஜாமுனா! பார்க்கலாம் வாங்க!
செய்முறை:
முதலில் பீர்க்கங்காயை தோல் சீவி சிறிய அளவில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு, உளுத்தம் பருப்பு சேர்த்து கொஞ்சம் பொன்னிறமாக வறுத்துக் கொண்டு பின் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும்.பின் கடாயில் அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்கி பின் புளி மற்றும் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.
பின் அதில் அரிந்து வைத்துள்ள பீர்க்கங்காயை சேர்த்து வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கலவை ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள கொண்டு பின் உப்பு சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு,பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வைத்து சட்னியில் ஊற்றினால் சுவையான பீர்க்கங்காய் சட்னி ரெடி!