வாருங்கள்! தொண்டைக்கு இதம் அளிக்கும் செட்டிநாடு சிக்கன் சூப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டில் உள்ளவர்களுக்கு ஜலதோஷம், காய்ச்சல், இருமல், தொண்டை புண் போன்ற சில பிரச்சனைகள் இருக்கும் போது நாம் சூப் போன்றவை செய்து பருகினால் கொஞ்சம் ரீலீஃப் கிடைக்கும்.சூப்பில் மட்டன் சூப், சிக்கன் சூப்,வெஜ் சூப், மஷ்ரூம் சூப், கார்ன் சூப் என்று பல விதமான சூப்களை செய்யலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவையாக இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சிக்கன் சூப் காண உள்ளோம்.
இந்த சிக்கன் சூப்பினை செட்டிநாடு ஸ்டைலில் செய்ய உள்ளதால் இதன் சுவை சற்று தூக்கலாக இருக்கும். இதனை ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யுமாறு வீட்டில் உள்ளவர்கள் கூறுவார்கள். இதனை செய்யும் போதே வீட்டில் உள்ள அனைவரும் எப்போது அருந்த கொடுப்பீர்கள் என்று கேட்கும் அளவிற்கு இதன் மணம் இருக்கும்.
வாருங்கள்! தொண்டைக்கு இதம் அளிக்கும் செட்டிநாடு சிக்கன் சூப்பினை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
ராஜ்மா வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாம் வாங்க!
செய்முறை :
முதலில் சிக்கனை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் ,தக்காளி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பிறகு, அதில் பட்டை மற்றும் லவங்கம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.அடுத்ததாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கி வந்த பின்னர் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி விட்டு, பின் அடுப்பில் இருந்து கடாயை இறக்கி விட வேண்டும். அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் வதக்கி வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதில் மஞ்சத்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை சேர்த்து மசாலாக்களின் காரத்தன்மை செல்லும் வரை வதக்கி விட வேண்டும்.
இப்போது அலசி வைத்துள்ள சிக்கன் சேர்த்து அதில் உப்பு போட்டு நன்றாக கிளறிக் கொண்டு தண்ணீர் ஊற்றி சுமார் 5 -6 விசில் வரை வைத்து வேக வைக்க வேண்டும். 6 விசிலுக்கு பின் குக்கரை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு சிறிது லெமன் ஜூஸ் பிழிந்து கலந்து விட்டு இறுதியாக மல்லித்தழை தூவி பரிமாறினால் அருமையான செட்டிநாடு சிக்கன் சூப் ரெடி!