வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு! இப்படி செய்து பாருங்க! எவ்வளவு சமைத்தாலும் போதாது!

By Asianet Tamil  |  First Published Feb 5, 2023, 7:50 PM IST

வாருங்கள்! வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


அசைவ உணவு வகைகளில் ஒன்றான கருவாடு என்றால் போதும். வேறு எதையும் தேட மாட்டார்கள். அதன் மணமும் சுவையும் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் இருக்கும். அதனை மறுநாள் வைத்து சாப்பிடும் பொழுது அதன் சுவை மேலும் அதிகமாக இருக்கும்.

கருவாட்டில் பல வகைகள் இருக்கின்றன. இன்று நாம் மாசிக் கருவாட்டு வைத்து சூப்பரான தொக்கு ரெசிபியை காண உள்ளோம். இதனை செய்யும் போது வீடே கமகமக்கும் . இதனை எல்லா விதமான சாதத்திற்கும் வைத்து சாப்பிட்டால் எவ்வளவு சாப்பிட்டோம் என்றே தெரியாது. நீங்களும் இதனை ஒரு முறை செய்து பாருங்கள். மீண்டும் மீண்டும்செய்து தரும்படி வீட்டில் உள்ளவர்கள் கேட்கும் அளவிற்கு இதன் சுவை அருமையாக இருக்கும்.

வாருங்கள்! வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • மாசி கருவாடு - 50 கிராம்
  • பெரிய வெங்காயம்- 100 கிராம்
  • தக்காளி -100 கிராம்
  • பச்சை மிளகாய் -1
  • மஞ்சள் தூள் -1/4 ஸ்பூன்
  • மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  • கடுகு- 1/4 ஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு-1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை- கையளவு
  • கறிவேப்பிலை-1 கொத்து
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு

ஆஞ்சேநேயர் கோவில் ஸ்பெஷல் வடை! எப்படி செய்வது ! பார்க்கலாம் வாங்க!

Tap to resize

Latest Videos

செய்முறை :

முதலில் மாசி கருவாட்டினை அம்மியில் வைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயம் மற்றும் தக்காளியை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் , கடுகு, உளுந்தம் பருப்பு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். பின் பொடியாக அரிந்து வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி விட்டு, அடுத்தாக அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் வதங்கிய பின் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் அகையவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின் தக்காளி சேர்த்து ,தக்காளி நன்றாக மசிந்த பின்னர் பொடித்து வைத்துள்ள கருவாட்டு துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அடுத்தாக குடில் அதில் 1 க்ளாஸ் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து பிரட்ட விட்டு அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பொடித்த கருவாட்டு துண்டுகள் தொக்கு பதத்திற்கு வந்த பிறகு, அடுப்பில் இருந்து இறக்கி விட்டு இறுதியாக மல்லித்தழையை சேர்த்து கிளறி விட்டால் மாசி கருவாட்டு தொக்கு ரெடி!

click me!