பருப்பு ஊற வைத்து அரைக்காமல் டேஸ்ட்டான மஷ்ரூம் வடை செய்யலாம் வாங்க!

By Asianet Tamil  |  First Published Feb 5, 2023, 5:33 PM IST

வாருங்கள் ! டேஸ்ட்டான மஷ்ரூம் வடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

 


மஷ்ரூம் வைத்து பல விதமான ரெசிபிக்களை செய்ய முடியும். மஷ்ரூம் வைத்து செய்யப்படும் அனைத்து ரெசிபிக்களும் மிகவும் அருமையாக இருக்கும். வழக்கமாக நாம் மஷ்ரூம் வைத்து மஷ்ரூம் கிரேவி, மஷ்ரூம் மசாலா, சில்லி மஷ்ரூம் போன்ற ரெசிப்பிகளை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம்.

அந்த வகையில் இன்று நாம் மஷ்ரூம் வைத்து சூப்பரான வடையை பார்க்க உள்ளோம்.
மஷ்ரூமில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ளலாம்.மேலும் இதனை சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாகும். மேலும் இதன் சுவை சற்று வித்தியாசமாகவும் சுவையாகவும் இருக்கும்.

Latest Videos

undefined

வாருங்கள் ! டேஸ்ட்டான மஷ்ரூம் வடை ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

தேவையான பொருட்கள்:

  • மஷ்ரூம் - 250 கிராம்
  • பிரட் - 2 ஸ்லைஸ்
  • சோம்பு - 1 ஸ்பூன்
  • துருவிய தேங்காய்- 5 ஸ்பூன்
  • பொட்டுக்கடலை மாவு - 100 கிராம்
  • கடலை மாவு - 50 கிராம்
  • மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

என்ன! சிக்கன் வைத்து ஊறுகாயா? பார்க்கலாம் வாங்க !

செய்முறை:

முதலில் மஷ்ரூமை நன்றாக அலசி விட்டு பின் அதனை பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று மல்லித்தழையை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பொடியாக அரிந்த மஷ்ரூமை போட்டு அதில் கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, துருவிய தேங்காய், சோம்பு மற்றும் மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின் அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வடை மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.பின் அதில் பிரட் க்ரம்ஸ் சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் மாவை கையில் கொஞ்சம் எடுத்து வடை போன்று தட்டி ,எண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும். அடுப்பின் தீயினை சிம்மில் வைத்துக் கொண்டு வடைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொண்டால் சுவையான மஷ்ரூம் வடை ரெடி!

click me!