ஆஞ்சேநேயர் கோவில் ஸ்பெஷல் வடை! எப்படி செய்வது ! பார்க்கலாம் வாங்க!

By Asianet Tamil  |  First Published Feb 5, 2023, 11:35 AM IST

வாருங்கள்! சுவையான ஆஞ்சேநேயர் கோவில் வடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


ஒவ்வொரு கோவிலிலும் சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், தயிர் சாதம், வடை ,கூழ் என்று ஒவ்வொரு விதமான பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.ஒவ்வொரு பிரசாதமும் ஒவ்வொரு விதத்தில் தனிச்சுவையை கொண்டதாக இருக்கும். இங்கு தரும் பிரசாதங்களை வாங்கி சாப்பிடுவதற்கே ஒரு தனிக் கூட்டம் வரும் . அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் எனில், ஆஞ்சநேயர் கோவில்களில் வழங்கப்படும் ஆஞ்சேநேயர்க்கு வடையை மாலையாக அணிவித்து அதனை அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள். இந்த வடையின் சுவைக்கு நிகர் எதுவுமில்லை என்று கூறலாம். அப்படிப்பட்ட ஆஞ்சேநேயர் கோவில் வடையை தான் இன்று நாம் காண உள்ளோம்.

இந்த வடையை ஆஞ்சேநேயர் ஜெயந்தி, அம்மாவாசை போன்ற தினங்களில் வீட்டில் சுத்தமாக செய்து ஆஞ்சநேயருக்கு பிரசாதமாக படைத்து நெய்வேத்தியமாக அனைவருக்கும் வழங்கலாம். மேலும் இந்த வடையின் சிறப்பம்சம் என்னவெனில் இதனை இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். இதனை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! சுவையான ஆஞ்சேநேயர் கோவில் வடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 

தேவையான பொருட்கள் :

  • உளுந்து - 200 கிராம்
  • மிளகு - 3 ஸ்பூன்
  • சீரகம் - 2 ஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - தேவையான அளவு

Latest Videos

undefined

முட்டை போண்டா தெரியும். இதென்ன சிக்கன் போண்டா! பார்க்கலாம் வாங்க!


செய்முறை :

முதலில் மிளகு மற்றும் சீரகத்தை அம்மியில் அல்லது கல்லில் இடித்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் உளுந்தை போட்டு தண்ணீர் ஊற்றி சுமார் 1 மணி நரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிரைண்டரில் ஊற வைத்த உளுந்தை வடிகட்டி சேர்த்துக் கொண்டு அதில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல், கொஞ்சம் கெட்டியாக நைசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த மாவில் தேவையான அளவு உப்பு, இடித்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அடுப்பின் தீயினை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வாழை இலையில் சிறிது எண்ணெய் அல்லது பட்டர் தடவி மாவை வடை போன்று தட்டி நடுவில் சின்ன ஹோல் போட்டு எண்ணெயில் போட்டுக் கொள்ள வேண்டும். ஒரு பக்கம் வெந்த பிறகு, மறு பக்கம் திருப்பி போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான ஆஞ்சேநேயர் கோவில் வடை ரெடி!

click me!