ராஜ்மா வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாம் வாங்க!

By Asianet Tamil  |  First Published Feb 6, 2023, 11:46 AM IST

வாருங்கள்! சுவையான ராஜ்மா கட்லெட் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு என்ன ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசிக்கிறீர்களா? மேலும் ஹெல்தியான ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும் என்று யோசிக்கிறீங்களா? அப்போ இந்த கட்லெட் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. அனைவருக்கும் பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளில் கட்லெட்டும் ஒன்றாகி விட்டது. கட்லெட்டில் கார்ன் கட்லெட், சோயா கட்லெட், உருளைக்கிழங்கு கட்லெட், சிக்கன் கட்லெட் என்று பல விதங்களில் செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் ராஜ்மா வைத்து கட்லெட் ரெசிபியை காண உள்ளோம்.

இதனை குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இதன் சுவை சூப்பராக இருக்கும்.கட்லெட்களை நம்மில் பலரும் வெளியில் கடைகளில் இருந்து தான் வாங்கி சுவைப்போம். வெளியில் வாங்கி சாப்பிடுவது அந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்குமோ என்ற கவலை எப்போதுமே இருக்கும். இனி அப்படி கவலை இல்லாமல் நாமே நமது வீட்டிலேயே ஆரோக்கியமாக,சுவையாக மேலும் எளிமையாக செய்யலாம்.

வாருங்கள்! சுவையான ராஜ்மா கட்லெட் ரெசிபியை வீட்டில் எப்படி சுலபமாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • ராஜ்மா -1 கப்
  • உருளைக்கிழங்கு -1
  • பச்சை மிளகாய்-3
  • பூண்டு-4 பற்கள்
  • சீரகம் -1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1/2 ஸ்பூன்
  • சாட் மசாலா-1/2 ஸ்பூன்
  • மிளகாய் பொடி -1/2 ஸ்பூன்
  • மல்லித்தழை-கையளவு
  • புதினா-சிறிது
  • லெமன் ஜூஸ்-1/2 ஸ்பூன்
  • உப்பு-தேவையான அளவு
  • எண்ணெய் -தேவையான அளவு
  • நெய்-தேவையான அளவு

வீடே கமகமக்கும் கருவாட்டு தொக்கு! இப்படி செய்து பாருங்க! எவ்வளவு சமைத்தாலும் போதாது!

Latest Videos


செய்முறை:

முதலில் ராஜ்மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரம் வரை ஊற வைத்து பின் அதனை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 4 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ராஜ்மாவை எடுத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரவென அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், பச்சைமிளகாய் ,மல்லித்தழை, இஞ்சி பூண்டு ஆகியவற்றை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு எண்ணெய் காய்ந்த பின் சீரகம் சேர்த்து தாளித்துக் கொண்டு பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி விட வேண்டும். அடுத்ததாக அதில் அரிந்து வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு அதில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
கலவை நன்றாக வதங்கிய பிறகு, அதில் அரைத்து வைத்துள்ள ராஜ்மா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டு அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும். இப்போது இதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கினை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.

பின் லெமன் ஜூஸ், புதினா,மல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.பின் கலவையை எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு அதனை கட்லெட் வடிவத்தில் தட்டிக் கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து தவா வைத்து சிறிது எண்ணெய் விட்டு சூடான பின் அதில் கட்லெட்டை போட்டு சிறிது எண்ணெய் விட்டு 2 பக்கமும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொண்டால் சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி!

click me!