என்ன! நிலக்கடலை வைத்து குலோப் ஜாமுனா! பார்க்கலாம் வாங்க!

By Asianet Tamil  |  First Published Feb 6, 2023, 4:42 PM IST

வாருங்கள்! நிலக்கடலை வைத்து டேஸ்ட்டான குலோப் ஜாமுன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்


குலோப் ஜாமுன் போன்ற இனிப்பு வகைகளை பிறந்த நாள்,திருமண நாள் மற்றும் பண்டிகை காலங்களில் வீட்டில் செய்து சாப்பிடுவோம். வழக்கமாக குலோப் ஜாமுனை கடைகளில் கிடைக்கும் ரெடி டு மிக்ஸ் வாங்கி தான் செய்து இருப்போம். ஆனால் இன்று நாம் வீட்டிலேயே சத்தான நிலக்கடலை வைத்து குலோப் ஜாமுன் ரெசிபியை காண உள்ளோம். நிலக்கடலை வைத்து செய்யப்படுவதால் இதன் சுவை வித்தியாசமான சுவையில் இருக்கும்.

வாருங்கள்! நிலக்கடலை வைத்து டேஸ்ட்டான குலோப் ஜாமுன் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

  • நிலக்கடலை -1 1/2 கப்
  •  சர்க்கரை- 1 கப்
  •  பால் -1/4 லிட்டர்
  •  மைதா- 1 1/2 கப்
  •  பேக்கிங் சோடா- 1 சிட்டிகை
  •  கேசரிபவுடர்-1 சிட்டிகை
  •  ஏலக்காய் -2
  •  முந்திரி பருப்பு-10
  • எண்ணெய் -தேவையான அளவு

Tap to resize

Latest Videos

இருமலை விரட்ட செட்டிநாடு சிக்கன் சூப் செய்து சாப்பிடுங்க!

செய்முறை :

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் நிலக்கடலைகளை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் இருக்கும் தோல்களை நீக்கி விட வேண்டும். ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி அதில் வறுத்து வைத்துள்ள நிலக்கடலை மற்றும் முந்திரி பருப்புகளை போட்டு சுமார் 1/2 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரத்திற்கு பிறகு ஊறிய பருப்புகளை தனியாக எடுத்து அதனை மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து ஒரு பௌலில் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது பௌலில் மைதா மாவு, கேசரி பவுடர் ஏலக்காய் பொடி மற்றும் பேக்கிங் சோடா ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். பின் அதி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவினை சுமார் 1/2 மணி நேரம் வரை அப்படியே வைத்து விட வேண்டும். பின் மாவினை கொஞ்சம் எடுத்து ஒரே மாதிரியான அளவில் சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு அகலமான பாத்திரம் வைத்து அதில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் ஊற்றி பாகு ரெடி செய்து கொள்ள வேண்டும்.பொரித்து வைத்துள்ள குலோப் ஜாமுன் உருண்டைகளை சர்க்கரை பாகினில் சேர்த்து 3 -4 மணி நேரம் வரை ஊற வைத்து பரிமாறினால் ருசியான நிலக்கடலை குலோப் ஜாமுன் ரெடி!

click me!