இறால் வடையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். சரிங்க இந்த இறால் வடையை எப்படி வீட்டில் செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
மாலை நேரங்களில் சூடான டீ அல்லது காபியுடன் சூடாக வடை சாப்பிட யாருக்குத்தான் பிடிக்காது.? வழக்கமாக நாம் பருப்பு வடை, மெது வடை , மசால் வடை என்று தான் வீட்டில் செய்து சுவைத்து இருப்போம். இன்று பருப்பு சேர்க்காமல் மொறு மொறுவென ஒரு வடை செய்ய உள்ளோம்.பருப்பு சேர்க்காமல் வடையா? ஆமாங்க சற்று வித்தியாசமாக இறால் சேர்த்து ஒரு வடை செய்ய உள்ளோம்.
இறால் கடல் வகையை சேர்ந்த அசைவம் என்பதால் இது நிச்சயம் அசைவ பிரியர்களுக்கு ஏற்ற மற்றும் பிடித்த ஒரு ரெசிபி என்று கூட கூறலாம். க்ரன்ச்சியான, க்ரிஸ்பியான, மற்றும் சுவையான இறால் வடையை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் வகையில் இருக்கும். சரிங்க இந்த இறால் வடையை எப்படி வீட்டில் செய்யலாம் என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
வெண்ணிலா கேக், சாக்லேட் கேக் தெரியும். இது என்ன ஜீப்ரா கேக் ?
இறால் வடை செய்ய தேவையான பொருட்கள்:
200 கிராம்- இறால்
1/2 கப்- தேங்காய் துருவல்
9- சின்ன வெங்காயம்
5- பச்சை மிளகாய்
1/2 ஸ்பூன் -இஞ்சி பூண்டு விழுது
1/2 ஸ்பூன் -கரம் மசாலா
3/4 ஸ்பூன் -சோம்பு தூள்
தேவையான அளவு -உப்பு
தேவையான அளவு-எண்ணெய்
செய்முறை:
இறாலை ஓடும் நீரில் நன்றாக அலசி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்சி ஜாரில் தேங்காய் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து இரண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு இதில் கரம் மசாலா, சோம்பு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
ஆரோக்கியத்தை அள்ளி தரும் தினை பாயசம்!
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். எண்ணெய் கொதித்த பின்னர் ரெடியாக உள்ள மாவினை எடுத்து வடை போல் தட்டி, தீயை மிதமாக வைத்து வடையை பொறித்து எடுக்க வேண்டும். ஒரு புறம் பொறிந்த பின் மறுபுறம் வேகும் படி திருப்பி போட்டு பொறித்து எடுக்க வேண்டும். அவ்ளோ தான் க்ரன்ச்சியான, க்ரிஸ்பியான, மற்றும் சுவையான இறால் வடை ரெடி! நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க!