Millet payasam : ஆரோக்கியத்தை அள்ளி தரும் தினை பாயசம்!

By Dinesh TGFirst Published Oct 13, 2022, 4:01 PM IST
Highlights

 சுவை மற்றும் சத்து மிகுந்த தினை பாயசம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அரிசி மற்றும் கோதுமையை போல் சிறு தானியங்களையும் நாம் அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். சிறு தானியங்கள் நமது ஆரோக்கியத்திற்கு பல வகையான நன்மைகளை அளிக்கின்றன. சிறு தானியங்களில் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, சோளம் என பல வகையான சிறு தானியங்கள் உள்ளன.  நார்ச்சத்து,கால்சியம் மற்றும் புரதங்கள் நிறைந்த சிறு தானியத்தை வைத்து பொங்கல், கிச்சடி, இட்லி, தோசை என பல விதமான உணவு வகைகளை நாம் செய்யலாம். அந்த வகையில் சிறு தானியங்களில் ஒன்றான தினை பாயசம் இன்று நாம் காண உள்ளோம். தினைக்கு பதிலாக வரகு, சாமை, கம்பு போன்ற எந்த வித சிறு தானியத்தையும் சேர்த்து செய்யலாம். அவ்வகையில் இன்று சுவை மற்றும் சத்து மிகுந்த தினை பாயசம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தினை பாயசம் செய்ய தேவையான பொருட்கள்:

பால் – 750 மில்லி 
பாசிப்பருப்பு- 75 கிராம் 
தினை – 50 கிராம் 
வெல்லம் – – 250கிராம் 
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை 

சத்தான தினை அரிசி தக்காளி சாதம்! செய்யலாம் வாங்க!

குங்குமப்பூ – 1 சிட்டிகை
வறுத்த முந்திரி- 10

செய்முறை:

அடுப்பில் ஒரு ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தினை சேர்த்துக் கொண்டு எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை தனியாக ஒரு தட்டில் மாற்றி கொள்ள வேண்டும். அதே கடாயில் எண்ணெய் சேர்க்காமல் பாசிப்பருப்பு சேர்த்துக் தீயை மிதமாக வைத்து , பாசிபருப்பின் மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பிரஷர் குக்கரில் தண்ணீர் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துள்ள பாசி பருப்பு மற்றும் தினையை சேர்த்து 3 விசில் வரும் வரை வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேக வைத்த பருப்பு மற்றும் தினையை ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் பால் சேர்த்துக் கொள்ள வேண்டும். தீயை குறைவாக வைத்து 10 நிமிடங்கள் வரை நன்கு கிளறி விட வேண்டும்.

Carrot Chutney : இதய நோய் வராமல் பாதுக்காக்க ஆரோக்கியமான கேரட் சட்னி!

பின் ஒரு பானில் வெல்லம் சேர்த்துக் கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். வெல்லம் நன்கு கொதித்து வெல்ல பாகு தயாரானதும், அதனை வடிகட்டி எடுத்து கொண்டு அதில் ஏலக்காய் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இதில் வேக வைத்துள்ள கலவையை சேர்த்து 3 நிமிடங்கள் வரை நன்றாக கிளறி விட வேண்டும். பின் இதனுடன் வறுத்த முந்திரியை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டால் போதும். சுவை மற்றும் சத்து மிகுந்த தினை பாயசம் ரெடி!

click me!