என்ன பரோட்டா என்று யோசிக்கிறீர்களா? .வட இந்தியர்களின் பிரதான உணவு வகைளில் இது நிச்சயம் இடம் பெற்று இருக்கும். என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கும். சரி நானே என்னவென்று சொல்லிடுறேன். ஆலூ பரோட்டா தான் இன்று நாம் காண போகின்றோம்
பொதுவாக பரோட்டா என்றால் நாம் அதனை கடைகளில் சென்று தான் வாங்கி சுவைப்போம். ஏனென்றால் மாவை பக்குவமாக பிசைந்து ,ஊற வைத்து, அதனை திரட்டய பின் தோசைக்கல்லில் இட்டு சுட்தெடுக்க வேண்டும். இப்படி செய்கின்ற போது ஒரு சில சமயங்களில் பரோட்டா சாஃப்ட்டாக வரமால் இருக்கும். இப்படி எல்லாம் கஷ்டப் படாமல் சுலபமாக வீட்டில் செய்யக்கூடிய ஒரு பரோட்டாவை தான் இன்றைய பதிவில் நாம் காண உள்ளோம்.
என்ன பரோட்டா என்று யோசிக்கிறீர்களா? .வட இந்தியர்களின் பிரதான உணவு வகைளில் இது நிச்சயம் இடம் பெற்று இருக்கும். என்னவாக இருக்கும்? என்னவாக இருக்கும். சரி நானே என்னவென்று சொல்லிடுறேன். ஆலூ பரோட்டா தான் இன்று நாம் காண போகின்றோம் .இந்த ஆலூ பாராட்டோவிற்கு எந்த ஒரு சைடு டிஸ்-ம் தேவையில்லை. இது மிகவும் மிருதுவாகவும் மற்றும் ருசியாகவும் இருக்கும். சரிங்க இன்றைய பதிவில் ஆலூ பரோட்டா எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.
undefined
வித்தியாசமான முறையில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு!
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 4 கப்
உருளைக்கிழங்கு - 4
ஜீரா - 1 ஸ்பூன்
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கரம்மசாலா தூள் - 1 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 சிட்டிகை
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
ஒரு அகன்ற பாத்திரத்தில் அல்லது பெரிய தட்டில் மைதா மாவு சேர்த்து அதில் சிறிது உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். மாவை 1 மணி நேரம் மூடிவிட்டு ஊற விட வேண்டும். பிறகு குக்கரில் உருளைக் கிழங்கு போட்டு சிறிது உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து , தண்ணீர் ஊற்றி வேக விட வேண்டும். கிழங்கு வெந்த பிறகு , உருளைக் கிழங்கின் தோலை நீக்கி விட்டு நன்றாக மசித்து கொண்டு அதில் மசாலாத் தூள், தனியா தூள், மிளகாய்த் தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், , கரம்மசாலா தூள், பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து சீரகம் போட்டுதாளித்த பின் அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையைசேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். மசாலா வாசனை செல்லும் வரை கிளறி விட்டு , அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைத்து ஆறவிட வேண்டும். பிறகு பிசைந்து ஊறவைத்துள்ள மைதா மாவை சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும், பின் ஒரு உருண்டையை எடுத்து, மைதா மாவில் லேசாக தேய்த்து, பின் சப்பாத்திப் போல் வட்டமாக தேய்க்கவும். அதன் மத்தியில் சிறிது உருளை மசாலாவை வைத்து, அதன் ஓரங்களை சுற்றி மடித்து மசாலா தெரியாதவாறு மூடி விட வேண்டும்.
10 நிமிடங்களில் சுவையான சீஸ் பாஸ்தா செய்வோமா ?
அடுத்து அதனை எடுத்து மீண்டும் மைதா மாவில் தேய்த்து, மறுபடியும் சப்பாத்திப் போல் கவனமாக தேய்க்க வேண்டும்.அழுத்தி தேய்க்காமல் உள்ளே வைத்துள்ள மசாலா வெளியில் வராமல் இருக்க கொஞ்சம் பக்குவமாக தேய்க்க வேண்டும். பின்னர் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்த்து , தேய்த்து எடுத்து வைத்துள்ள பரோட்டா போட்டு, குறைந்த தீயில் வைத்து வேக விட வேண்டும்.இரண்டு
பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து விட்டால் சுவையான ஆலூ பரோட்டா ரெடி!!