அப்படியான இறாலை வைத்து மணக்கும் இறால் உருண்டைக் குழம்பு ரெசிபியை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கடல் உணவான இறாலை பயன்படுத்தி வறுவல், பொரியல்,புட்டு,சுக்கா என்று பல்வேறு விதங்களில் செய்து சாப்பிட்டு இருப்போம். இறாலை எப்படி சமைத்தாலும் அதன் சுவை அலாதியானது.இதனை சமைக்கும் போது அடுத்த தெரு வரை மணமணக்கும்.
அப்படியான இறாலை வைத்து மணக்கும் இறால் உருண்டைக் குழம்பு ரெசிபியை வீட்டில் சுலபமாக செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.இந்த மாதிரி இறால் குழம்பை வீட்டில் ஒரு முறை செய்தால் இன் வீட்டில் எப்போது இறால் எடுத்தாலும் இப்படியே செய்து தரும் படி வீட்டில் இருப்பவர்கள் கேட்பார்கள்!
தேவையான பொருட்கள்:
இறால் - 2 கப்
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
பூண்டு -10 பற்கள்
புளி- லெமன் சைஸ்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள்-சிறிது
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
மல்லித்தழை-தேவையான அளவு
undefined
தாளிப்பதற்கு:
எண்ணெய் - 2 ஸ்பூன்
கடுகு -1 /4 ஸ்பூன்
கருவேப்பிலை - 1 கொத்து
கொழுக் மொழுக் தொப்பை எப்படி உருவாகிறது! அதை குறைக்க இதை செய்தால் போதும்!
செய்முறை :
முதலில் இறாலை சுத்தப்படுத்தி அலசி வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் மற்றும் தக்காளியை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். புளியை ஒரு கிண்ணத்தில் போட்டு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி புளிக்கரைசல் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். மிக்சி ஜாரில் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலை சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்த இறாலை ஒரே அளவிலான உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது புளிக்கரைசலில் சிறிது மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். பூண்டினை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் 1 கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து பின் பொடியாக அரிந்து வைத்துள்ள பூண்டினை சேர்த்து வதக்கி விட்டு அடுத்தாக அதில் வெங்காயம் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்த்து ,தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். இப்போது புளிக்கரைசலை சேர்த்து அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு கொதிக்கும் நேரத்தில் பிடித்து வைத்துள்ள இறால் உருண்டைகளை சேர்த்து சுமார் 15 நிமிடங்கள் வரை வேக விட வேண்டும். குழம்பு கெட்டியான பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவி பரிமாறினால் ஒரு சொட்டு கூட மீதமில்லாமல் அனைத்தும் காலியாகி விடும்