சமையல் எண்ணெய் கொழுப்பு ஏத்திடும்னு சொல்வாங்க.. இந்த எண்ணெய் தினம் 1 ஸ்பூன்.. புற்றுநோய் வந்தா கூட சமாளிக்கும்

By Ma Riya  |  First Published Mar 15, 2023, 1:06 PM IST

சமையல் எண்ணெய் நம்முடைய ஆரோக்கியத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. அதில் எது நமக்கு ஏற்றது? எதை தவிர்க்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 


ஆரோக்கியத்தை மேம்படுத்த மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். ஆனால் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ளும் போது அதனுடைய சத்துக்களை தவறவிட சமையல் எண்ணெய் ஒரு காரணமாக அமைகிறது என்பதை அறிவீர்களா? சமையல் எண்ணெய் எல்லா உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. வதக்குவது, தாளிப்பது, பொரிப்பது என எண்ணெய் இல்லாத சமையலே இந்தியாவில் கிடையாது. இந்நிலையில் ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான எண்ணெய்களை இங்கு தொகுத்து வழங்கியிருக்கிறோம். அதை அறிந்து சத்தான வகையில் உணவுகளை சமையுங்கள். 

ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் நெய், கடுகு எண்ணெய், ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள். அது ஏன் என்பதை காண்பதற்கு முன்பாக, ஆரோக்கியமில்லாத எண்ணெய்யை தெரிந்து கொள்ளுங்கள். சூரியகாந்தி எண்ணெய், பாமாயில் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். எப்போதும் எண்ணெய் பாக்கெட்டுகளில் 'எச்டிஎல் கொழுப்பு' எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவேண்டும். அதுவே உடலுக்கு நல்லது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: மணி பர்ஸ் இந்த நிறத்துல பயன்படுத்தினா உங்க பணம் ஒருநாளும் தீர்ந்து போகாது..ஆனா இந்த கலர் எப்பவும் டேஞ்சர் தான்

ஆரோக்கியமான சமையல் எண்ணெய்கள்..! 

  1. கடலை எண்ணெய் உணவில் பயன்படுத்துவது நல்லது. பாமாயில் விலை குறைவு என்பதால் பலரும் பாமாயிலை தேர்வு செய்கிறார்கள். ஆனால் கடலை எண்ணெயை வாங்கி அளவோடு பயன்படுத்தினால் நீண்ட நாள் உபயோகிக்க முடியும். ஒரு தேக்கரண்டி கடலை எண்ணெயில் வைட்டமின் ஈ - கிட்டத்தட்ட 11% இருக்கிறது. இது நம் உடலுக்கு தீங்கு செய்யும் ஃப்ரீ ரேடிக்கல்களை தடுக்கும். அளவாக எடுத்து கொள்ளும்போது இதயநோயில் இருந்து பாதுகாக்கும். 
  2. நெய் இந்திய உணவு வகைகளில் ரொம்பவும் முக்கியமான உணவு பொருள். ஆனால் எல்லோருக்கும் இதை வாங்கி பயன்படுத்த முடிவதில்லை. நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ, ஈ, கே, பியூட்ரிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளது. இது செரிமானத்திற்கும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது. 
  3. கடுகு எண்ணெய் நம் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. உங்கள் உணவில் கடுகு எண்ணெயை சேர்ப்பதால் ஆரோக்கியமான இதயம் கிடைக்கும். கடுகு எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது சரும ஆரோக்கியத்தை நன்றாக வைக்கும். 
  4. ஆலிவ் எண்ணெய் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதோடு, சரும பராமரிப்பையும் மேம்படுத்தும். ஆலிவ் எண்ணெயில் உள்ள முதன்மை கொழுப்பு அமிலமான ஒலிக் அமிலம் புற்றுநோய் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. ஆலிவ் எண்ணெயில் காணப்படும் ஓலியோகாந்தல், ஒலியூரோபீன் எனும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் இயற்கையான அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டவை.

இதையும் படிங்க: மோர் உடல் சூட்டை தான் தணிக்கும்னு நினைச்சிருப்பீங்க.. ஆனா 1 டம்ளர் மோர் குடித்தால்.. இத்தனை நன்மைகள் இருக்கு!

click me!