இன்று காரடையான் நோன்பிற்கு மாலை இந்த இனிப்பு அடையை நெய்வேத்தியமாக படைத்து வழிபடுங்க!

By Asianet Tamil  |  First Published Mar 15, 2023, 2:58 PM IST

இன்று நாம் காரடையான் நோன்பு ஸ்பெஷல் தித்திப்பான இனிப்பு அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


இன்று காரடையான் நோன்பு அனுசரிக்கப்படுகிறது. இந்த நன்னாளில் சாவித்ரி அனுஷ்டித்த நோன்பினை நாமும் பின்பற்றினால் நமக்கும் சுமங்கலி பாக்கியம் நீடித்து நிலைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இந்த நாளில் சாவித்ரி அம்பாள் மேற்கொண்ட நோன்பினை நாமும் கடைபிடித்து அம்பிகையின் பரிபூரண ஆசிகளை பெற முடியும் .அதற்கு இன்று மாலை நோன்பு முடித்து பூஜிக்கும் போது அம்பாளுக்கு பிடித்த இனிப்பு அடை அல்லது கார அடை செய்வது வழக்கம்.


அதன் அடிப்படையில் இன்று நாம் காரடையான் நோன்பு ஸ்பெஷல் தித்திப்பான இனிப்பு அடையை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த உணவை பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு நீங்கள் மாலை நேர சிற்றுண்டியாக செய்து தரலாம்.இதில் வெல்லம் சேர்த்து செய்வதால் மிகவும் ஆரோக்கியமான ஒரு உணவாகும்.


தேவையான பொருட்கள்:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
வெல்லம்- 1 கப்
தேங்காய் - 1/2 கப்
காராமணி 1/4 கப்
ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
தண்ணீர் 2 கப்

கோடை வெயிலில் இருந்து தப்பிக்க உடலை குளு குளு வென வைக்க சிறந்த பானங்கள் வீட்டிலேயே செய்யலாம் !
 

Latest Videos

செய்முறை:

முதலில் காராமணியை குக்கரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்து பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு விலாசமான பாத்திரம் வைத்து அதில் இரண்டு கப் அளவிலான தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்து பாகு போன்று செய்து கொள்ள வேண்டும்.

வெல்லம் முற்றிலும் கரைந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது வேக வைத்து எடுத்துள்ள காராமணி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய்ப் பொடி ஆகியவை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இப்போது இதில் வறுத்து வைத்துள்ள பச்சரிசி மாவை சிறிது சிறிதாக போட்டு கட்டி தட்டாமல் இருக்கும் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருத்தல் வேண்டும்.

மாவு நன்றாக வெந்த பிறகு அடுப்பில் இருந்து மாவினை இறக்கி விட வேண்டும். போன் கையில் சிறிது எண்ணைய் தடவி அதில் இந்த மாவை வைத்து அடை போன்று தட்டிவிட்டு வாழை இலையில் வைக்கவும். பின் இவைகளை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் பத்து நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் தித்திப்பான சுவையான காரடையான் நோன்பு அடை ரெடி!

இன்று மாலை நீங்களும் இதனை செய்து தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக படைத்து அருள் மற்றும் ஆசி பெற்று வளமான மற்றும் மங்களமான வாழ்வை வாழுங்கள்!

click me!