குட்டிஸ்க்கு பிடித்த ஒரு காய் என்றால் கண்டிப்பா அது பொட்டேடோ தாங்க. பொட்டேடோ பிரை, பொட்டேடோ சிப்ஸ் , பொட்டேடோ மசாலா என்று எது செய்து கொடுத்தாலும் ஃபுள்ளா கம்ப்ளீட் பண்ணிடுவாங்க. பொட்டேடோ ட்ரையாங்கள் ஸ்னாக்ஸ்- வெளில இதே வாங்கி சாப்பிட்டால் விலை ரொம்ப காஸ்டலியா இருக்கும் . அதனால் வீட்லேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க .
வயிற்று உபாதைகள் , வயிற்றுப்புண், குடல் பிரச்சனைகள் , இரைப்பைக் கோளாறுகள் இருப்பவர்கள் உருளைக்கிழங்கை எடுத்துக் கொள்ளலாம். உருளையில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால் இதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கும் இது மிகவும் ஏற்றது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு 1/4 கிலோ
மல்லி தழை கையளவு
1/2 ஸ்பூன் சில்லி பிளேக்ஸ் ( red chilli fakes )
Rava Appam : இன்ஸ்டன்ட் இனிப்பு! ரவை அப்பம்!
1/2 ஸ்பூன் ஓரிகனோ
1/2 ஸ்பூன் உப்பு
1/2 ஸ்பூன் மிளகு தூள்
3 ஸ்பூன் சீஸ் (துருவியது)
2 ஸ்பூன் கார்ன் மாவு
2 ஸ்பூன் அரிசி மாவு,
சேமியா 50 கிராம்
செய்முறை:
உருளைக்கிழங்கை வேக வைத்து கொண்டு பின் அதனை நன்றாக ஸ்மாஷ் செய்து கொள்ள வேண்டும். இப்போது இதில் மல்லி தழை, சில்லி பிளேக்ஸ் , உப்பு, மிளகு தூள், சீஸ் , கார்ன் பவுடர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின் அந்த கலவையை முக்கோண வடிவங்களில் வெட்டி கொள்ளவும். ஒரு தட்டில் கொஞ்சம் சேமியாவை கையால் பொடித்து கொள்ளவும்.
ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் வரகு அரிசி கிச்சடி !
பின் ஒரு கிண்ணத்தில் கார்ன் பவுடர் , அரிசி மாவு ,உப்பு, மிளகு தூள் மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து பால் பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்போது முக்கோண உருளை கிழங்குகளை இந்த சோள மாவில் டிப் செய்து , பின் சேமியாவில் முழுவதும் பிரட்டி எடுக்க வேண்டும். 10 நிமிடம் பிரிட்ஜ்ல் வைக்க வேண்டும்.
அடுத்து எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சூப்பரான , கிரிஸ்பியான , டேஸ்ட்டான குட்டிஸ் பேவரைட் பொட்டேடோ ட்ரையாங்கள் ஸ்னாக்ஸ் ரெடி! என்னங்க செய்து சாப்பிடனும் போல ஆசையா இருக்கா? அப்போ என்ன ? இன்றைக்கே செஞ்சு பாத்து அசத்துங்க.