Samai Arisi Pongal : சுவையான மற்றும் சத்தான சாமை பொங்கல் ரெசிபி!

By Dinesh TG  |  First Published Sep 26, 2022, 9:57 PM IST

சத்தான, சுவையான மற்றும் எளிதான  உடலுக்கு வலுசேர்க்கும் சாமை பொங்கல் ரெசிபி, ஈஸியா நம் வீட்டிலேயே செய்வது  என்று பார்க்கலாம்.


நாம் பொதுவாக நம் வீட்டிலும் சரி அல்லது விஷேங்களிலும் சரி  பச்சரிசி வைத்து தான் பொங்கல் சாப்பிட்டு இருப்போம்.  என்றாவது சாமை  அரிசியில் பொங்கல் வைத்து சாப்பிட்டு இருக்கீங்களா? இல்லையா? அப்போ முதலில் இதனை தெரிஞ்சுக்கோங்க. சாமை அரிசியானது பச்சரிசியை விட  உடலுக்கு பல  நன்மைகளை தருகிறது. 

சாமையில்  சுண்ணாம்பு சத்தும்,புரதமும்,அதிகமாக உள்ளது. இது எலும்பு முறிவு போன்ற  பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.  

Latest Videos

விந்தணு உற்பத்தியை அதிகரிக்க, சர்க்கரை அளவை குறைக்க, இரத்த சோகையை குணப்படுத்த , மலச்சிக்கலை போக்க , சளி, ஆஸ்துமா போன்ற நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு சாமை அரிசி சிறந்தது.  இப்படி பல வகையான  நன்மைகளை தரும் சாமை அரிசியை வைத்து இன்று நாம் பார்க்க போவது சாமை அரிசி பொங்கல். 

சாமை அரிசி பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

சாமை அரிசி - 1/4 கிலோ 

பாசிப் பருப்பு - 100 கிராம்,

இஞ்சி -  1 சின்ன  துண்டு,

மிளகு - 1 ஸ்பூன் 

சீரகம் -  1 ஸ்பூன்,

பெருங்காயத் தூள் – சிறிதளவு

நெய் - 50 மி.லி

முந்திரி – 10,

தேவையான அளவு- உப்பு .

செய்முறை:

முதலில் பாசிப்பருப்பு மற்றும் அரிசியைக் கழுவ வேண்டும்.  1  பங்கு அரிசிக்கு 4 பங்கு தண்ணீர் சேர்த்து குக்கரில் அரிசி மற்றும் பருப்பை மாற்ற வேண்டும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 விசில் வரும் வரை காத்து இருக்கவும். பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.  ஆவி அடங்கிய பின் குக்கரை திறக்கவும். 

ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதம் வரகு அரிசி கிச்சடி !

அடுத்து கடாயில்  சிறிது  நெய் சேர்த்து  மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி , பெருங்காயத்தூள்  மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.  

தாளித்ததை குக்கரில் உள்ள சாதத்துடன்  சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.  அவ்ளோதாங்க  ஈஸியான , சுவையான , சத்தான  சாமை பொங்கல் ரெசிபி தயார்!  இதற்கு தேங்காய் சட்னி அல்லது சாம்பார் வைத்து சாப்பிடலாம் . 

பச்சரிசியில் செய்வது போல் என்றாலும் சுவையும் , சத்தும் அதிகமாக இருக்கும் இந்த சாமை அரசி பொங்கலை  ஆரோக்கியமாக  வாழ நீங்களும் வீட்டில் வாரம் ஒரு முறையாவது எடுத்துக் கொள்ளுங்கள்.

click me!