ரெஸ்டாரண்டில் வாங்கி சாப்பிட்டால் ருசி அதிகமாக இருக்கும் மேலும் அதன் விலையும் அதிகமாக தான் இருக்கும். நம் வீட்டிலேயே டேஸ்ட்டாக இந்த மஷ்ரூம் கிரேவி, எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் காணலாம். ஆளை மயக்கும் மஷ்ரூம் மசாலா ! பார்ப்போமா?
மஷ்ரூமில் அதிக அளவு பொட்டாசியம் சத்து உள்ளதால், ரத்த நாளங்களில் மற்றும் நரம்புகள் இருக்கும் இறுக்கத்தை தளர்த்தி ரத்த அழுத்தம் உயராமல் தடுக்கும்.
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், கொழுப்பு இல்லாத நார்ச்சத்து அதிகமுள்ள மஷ்ரூமால் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் எடுத்துக் கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.
வைட்டமின் டி சத்து அதிகம் காணப்படுகிறது. மேலும் உடலுக்கு தேவையான பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களையும் மஷ்ரூம் கொண்டிருப்பதால், அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான சக்தியை தருகிறது.
சரிங்க! இவ்ளோ ஆரோக்கிய தருகின்ற மஷ்ரூம்மை வைத்து டிஷ் செய்யலாம் வாங்க!
மஷ்ரூம் மசாலா தேவையான பொருட்கள்:
மஷ்ரூம் 200 கிராம்
பட்டை – 2
கிராம்பு – 1
சோம்பு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
ஏலக்காய் – 2
வெங்காயம் 1 பொடியாக நறுக்கியது
இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
தக்காளி 2 ( தக்காளி விழுது)
உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
தனியா தூள் – 1/2 ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 ஸ்பூன்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
வெண்ணை 1 ஸ்பூன்
முந்திரிப்பருப்பு பவுடர் 2 ஸ்பூன்
எண்ணெய் பொரிப்பதற்கு
Gray Hair : நரைமுடியா உங்களுக்கு? இனி கவலையே வேண்டாம்: இதைப் பயன்படுத்தி பாருங்கள்!
செய்முறை:
ஒரு அடுப்பில் வானொலி வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பட்டை , கிராம்பு, சீரகம் , ஏலக்காய் ,சோம்பு போட்டு தாளிக்க வேண்டும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்
அதன்பின் இஞ்சி பூண்டு விழுது சேர்க்க வேண்டும். அனைத்தும் நன்றாக வதங்கி வந்தபிறகு, தக்காளி விழுதை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வதக்க வேண்டும். அடுத்து கிரேவிக்கு தேவையான உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மஞ்சள் தூள் , மல்லித் தூள், மிளகாய்தூள் சேர்த்து
Chicken Urundai : சூப்பரான சிக்கன் உருண்டை குழம்பு!
பச்சை வாடை போகும் வரை வதக்கி விட வேண்டும். பின் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 200 கிராம் அளவு மஸ்ரூமை சேர்த்து, லேசாக நீர் தெளித்து 2 நிமிடங்கள் வரை மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
அதன் பின் இறக்குவதற்கு ஒரு நிமிடம் முன்பாக கரம் மசாலா 1/2 ஸ்பூன் சேர்க்க வேண்டும். அடுத்து முந்திரிப்பருப்பு பவுடரை சேர்த்து 2 நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு, ஸ்டவ்வை ஆஃப் செய்து விடுங்கள். இறுதியாக வெண்ணெய் சேர்த்தால் சுவை அதிகமாக இருக்கும் . அவ்ளோதாங்க ஆளை மயக்கும் மஷ்ரூம் மசாலா ரெடி!