முட்டையை வேக வைத்து, ஆம்லேட், பொரியல் என்று தான் செய்து சாப்பிட்டு இருப்போம். இதையே அடிக்கடி செய்து தருவதால் சில குழந்தைகள் இதனை சாப்பிட மறுப்பார்கள். அதே முட்டையை வைத்து கொஞ்சம் வித்யாசமாக ரோல் மாதிரி செய்து தரலாமா!!!
பரபரப்பான காலை வேளையில்அலுவலகத்திர்க்கும் பள்ளிக்கும் கிளம்பும் அவசரத்தில் காலை உணவுசெய்வதே சிரமம் . அப்படியே செய்தாலும், அதைச் முழுவதுமாக சாப்பிடாமல் ஓடுவதே பலரின் இயல்பு. காலை உணவில் கண்டிப்பாக ஒரு சத்தான ஆகாரமாக இருக்க வேண்டும். அதற்கு முட்டையைச் சேர்த்துக்கொண்டால் போதும். நம் உடலுக்கான முழு ஆற்றலுக்கும் உத்தரவாதம்.
உடலுக்குத் தேவையான அநேக சத்துகள் முட்டையில் உள்ளன .
உடல் எடையை குறைக்க உதவுகிறது. எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கிறது. கண் நோய்கள் வராமல், கண் புரை ஏற்படாமல் தடுக்க உதவுகிறது .
Mutton Curry : கேட்டு வாங்கி சுவைக்க தூண்டும் கேரளா மட்டன் கறி!
தேவையான பொருட்கள் :
சப்பாத்தி - 6
முட்டை - 2
பெரிய வெங்காயம் - 3
தக்காளி 1
மிளகாய் பொடி 1 ஸ்பூன்
தனியா 1 பொடி 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை 1 கொத்து
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
செய்முறை:
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றை சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரை வதக்கி விட வேண்டும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை செல்லும் வரை நன்கு வதக்க வேண்டும். அடுத்ததாக தக்காளி சேர்த்து , அது நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
Instant Dosa : தோசை மாவு அரைக்காமல் 10 நிமிடத்தில் தோசை ரெடி!
பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி 2 நிமிடம் கிளரி விட வேண்டும். அடுத்து மிளகாய் பொடி, தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்தால் எக் மசாலா ரெடி.
இப்போது செய்து வைத்துள்ள சப்பாத்தியில் இந்த எக் மசாலாவை வைத்து சுருட்டினால் , எக் சப்பாத்தி ரோல் ரெடி!