க்ளோப் ஜாமுன், பால் கோவா , ரவா லட்டு, அதிரசம் போன்ற இனிப்பு வகைகளை செய்து சாப்பிட குறைந்தது சில மணி நேரமாவது காத்து இருக்க வேண்டும். ஆனால் இந்த ரவை அப்பத்தை நாம் உடனே செய்து உடனே சாப்பிடலாம். மிகவும் சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய ரவை அப்பம் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
ரவையில் நிறைந்துள்ள வைட்டமின் பி , வைட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் நமது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. மேலும் ரவையில் உள்ள பொட்டாசியம், நமது சிறுநீரகத்திற்கு நன்மையை தருகிறது. இது நமது சிறுநீரகத்தில் உள்ள செயல்பாட்டை விரிவாக்குகிறது.
எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க ரவை முக்கிய பங்கு வகிக்கிறது. இதய செயல் இழப்பு, மாராடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
undefined
அப்பம் செய்ய தேவையான பொருட்கள் :
1 கப் - மைதா மாவு
1/2 கப்- ரவை
1/2 கப் - சர்க்கரை
1 சிட்டிகை - உப்பு
1/4 ஸ்பூன் -ஏலக்காய் பொடி
1/4 ஸ்பூன் -பேக்கிங் சோடா
1 சிட்டிகை - மஞ்சள் ஃபுட் கலர்
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள மைதா மாவு சேர்த்துக் கொள்ளவும். பின் அதனுடன் ரவை மற்றும் கப் சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் தண்ணீரை சிறிது சிறிதாக கலந்து கொள்ளவும்.
ஒரு சிட்டிகை உப்பு, 1/4 ஸ்பூன் ஏலக்காய் பொடி,1/4 ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு சிட்டிகை மஞ்சள் நிறம் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.
belly fat : தொப்பையைக் குறைக்க இந்த மேஜிக் பானத்தை குடிங்க!
கட்டி இல்லாமல் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும். மாவு கெட்டியாக இல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். அதன் பின் மூடி வைத்து 10 நிமிடங்கள் வைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு மாவு ஓரளவு கெட்டியாக இருப்பதை காணலாம் .
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்றிக் கொள்ளவும். நன்றாக சிவந்த பின்னர் மறுபக்கம் திருப்பி போடவும். பொன்னிறமாகும் வரை வேக வைக்கவும். பின் எண்ணையை வடிகட்டி தனியே எடுக்கவும். அவ்ளோதாங்க சுலபமான, சுவையான இன்ஸ்டன்ட் இனிப்பு ! ரவை அப்பம் ரெடி!