பிசிபெல்லா பாத், டொமட்டோ பாத், வங்கி பாத் தெரியும். அதென்ன மகாராஷ்டிரா மசாலா பாத் ? பார்க்கலாம் வாங்க.
மகாராஷ்டிராவின் பிரபலமான உணவுகளில் மகாராஷ்டிரா மசாலா பாத் ஒன்றாகும். இதன் அரோமா மனதை அள்ளும் வகையில் இருக்கும். இதற்கு தனியாக எந்த ஒரு சைடு டிஷ்ம் தேவை இல்லை. நம்மூரில் எப்படி வெரைட்டி ரைஸ்களில் புளியோதரை, லெமன் சாதம், தக்காளி சாதம் போன்றவை இடம் பிடிக்கிறதோ அது போல் இந்த உணவும் மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக உள்ளது.
இதில் சேர்க்கப்படும் கோடா மசாலா இதன் சுவையை அதிகரிக்கும். இந்த ரெசிபியில் பல வகையான காய்கறிகளை சேர்ப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது. இந்த மகாராஷ்டிரா மசாலா பாத் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க!
undefined
தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி 1 கப்
வெங்காயம் 1
தக்காளி 1/2
பட்டாணி 1/4கப்
காலிபிளவர் 1/4கப்
கேரட் 1
உருளைக்கிழங்கு 1
இஞ்சி பூண்டு விழுது 3டீஸ்பூன்
கரம் மசாலா 1டீஸ்பூன்
கோடா மசாலா 1டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/2டீஸ்பூன்
மிளகாய் தூள் 1டீஸ்பூன்
உப்பு 1டீஸ்பூன்
நெய் 2டீஸ்பூன்
எண்ணெய் தேவையான அளவு
தேவையான அளவு உப்பு
தேங்காய் பால் 1/2கப்
1/2கப் தயிர்
முந்திரி பருப்பு 3
மல்லி தழை சிறிது
செய்முறை :
குக்கரில் சிறிது நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி காயவிடவும் . எண்ணெய் காய்ந்த உடன் வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை செல்லும் வரை வதக்கவும் .
பின் தக்காளி, காலிபிளவர் , உருளைக்கிழங்கு , பட்டாணி,கேரட், மற்றும் சேர்த்து கிளறவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள்,கோடா மசாலா , கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
இதில் தயிர் மற்றும் மல்லி தழை சேர்த்து கொள்ளவும்.பின்னர் தேவையான அளவு தேங்காய் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்த பின் அரிசி சேர்த்து கொள்ளவும். அடுத்து அனைத்தையும் நன்றாக கிளறி 2 விசில் வைக்கவும் . ஆவி அடங்கிய உடன் குக்கரை திறந்தால் சுவையான மஹாராஷ்டிரா மசாலா பாத் தயார்.நெய்யில் முந்திரிபருப்பை வறுத்து பாத்தில் சேர்த்து கொள்ளவும். அவ்ளோதாங்க மகாராஷ்டிரா மசாலா பாத் ரெடி!