Kashmiri Dum Aloo : ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் ‘காஷ்மீரி தம் ஆலு’ செய்வோமா?

By Dinesh TG  |  First Published Oct 14, 2022, 1:24 PM IST

காஷ்மீரி தம் ஆலு ரெசிபி. நம் வீட்டில் இருந்தே காஷ்மீரி ஸ்பெஷல் தம் ஆலு தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.


வழக்கமாக நாம் உருளைக்கிழங்கை பொரியல், குருமா, ப்ரை என்று தான் சமைத்து சாப்பிட்டு இருப்போம். சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கை வைத்து ரிச்சான மற்றும் சூப்பரான சைடு டிஷ் பண்ணலாமா? இதனை சப்பாத்தி, பரோட்டா மற்றும் புலாவ் போன்றவற்றிற்கு பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.ருசியா இருக்கும் இந்த கிரேவியை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா? காஷ்மீரி தம் ஆலு தாங்க அந்த ரெசிபி. நம் வீட்டில் இருந்தே காஷ்மீரி ஸ்பெஷல் தம் ஆலு தான் இன்று நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தேவையான பொருட்கள்:

Tap to resize

Latest Videos

சின்ன சின்ன உருளைக் கிழங்கு-1/2 கிலோ 
காஷ்மீரி மிளகாய்-10
தயிர்-1/2 லிட்டர் 
முந்திரி -20 
சுக்கு – 1 இன்ச்
மிளகு – 1/2 ஸ்பூன்
சீரகம் – 3/4 ஸ்பூன்
வர மல்லி – 1 ஸ்பூன்

Sweetcorn Chicken soup : சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் ஸ்வீட்கார்ன் சிக்கன் சூப்!

சோம்பு – 1 ஸ்பூன்
பட்டை – 1 
கிராம்பு – 2
ஏலக்காய் – 3
மிளகாய் தூள் – 1 ஸ்பூன், 
டொமேட்டோ கெட்சப் --3 டேபிள் ஸ்பூன் 
எண்ணெய்-தேவையான அளவு 

செய்முறை:

சிறிய உருளைக்கிழங்குகளை வாங்கி நன்றாக அலசி கொண்டு, வெட்டாமல் அப்படியே முழுசாக குக்கரில் போட்டு ஒரே ஒரு விசில் மட்டும் விட்டு வேக வைத்து ,தோல் உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் உருளைக்கிழங்கின் சில பக்கங்களில் போஃர்க் வைத்து ஆங்காங்கே சிறிய ஹோல் போட்டு கொள்ள வேண்டும்.  அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போட்டு, பொன்னிறமாக மாறும் வரை பொறித்து ஒரு தட்டில் எடுத்து கொள்ள வேண்டும்.

பின்பு காஷ்மீரி மிளகாயில் உள்ள விதைகளை அகற்றி விட்டு, தண்ணீரில் சுமார் 20 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். ஒரு சின்ன கிண்ணத்தில் முந்திரி பருப்பை வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊறவைத்து , இந்த இரண்டினையும் தண்ணீரில் இருந்து வடித்து கொண்டு, ஒரு மிக்சி ஜாரில் தனித் தனியாக சிறிது நீர் தெளித்து விழுது போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் தயிரை மத்து பயன்படுத்தி நன்றாக கடைந்து வைத்துக் கொண்டு, அரைத்துவைத்துள்ள மிளகாய் விழுது மற்றும் முந்திரி பருப்பு விழுதை சேர்த்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.இப்போது தயிரின் நிறம் சிவப்பாக மாறிவிடும். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொண்டு அதில் வர மல்லி, மிளகு , சீரகம் , சோம்பு ,ஏலக்காய் ,பட்டை கிராம்பு ,சுக்கு ஆகியவற்றை சேர்த்து எண்ணெய் இல்லாமல் இரண்டு நிமிடங்கள் வறுத்த பின், மிக்சி ஜாரில் மாற்றி நைசான பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

குழந்தைகளுக்கு ஏற்ற ஆரோக்கியமான பேஷன் புரூட்: எப்படி உண்ணலாம்?

அடுப்பில் ஒரு கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தூள் மற்றும் நம்மிடம் அரைத்து வைத்துள்ள மசாலா தூள் சேர்த்து வறுத்து விட்டு, அதில் கடைந்து வைத்துள்ள தயிரை ஊற்றி சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். பின் அடுப்பின் தீயை மிதமாக வைத்து சுமார் 10 நிமிடங்கள் இதை கொதிக்க வைத்து, மேலே ஒரு தட்டு போட்டு மூடிவிட வேண்டும்.

எண்ணெய் பிரிந்து மேலே வரும் போது டொமேட்டோ கெட்சப் ஊற்றி , நன்றாக மிக்ஸ் செய்து சிறிது தண்ணீரை ஊற்றி, மீண்டும் சுமார் ஐந்து நிமிடங்கள் வரை கொதிக்க விட வேண்டும். அடுத்ததாக வறுத்து வைத்துள்ள பொட்டேட்டோவை இதனில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மீண்டும் 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மல்லி தழையை தூவி விட்டால் போதும். வேற லெவல் டேஸ்ட்டில் காஷ்மீரி தம் ஆலூ ரெடி!!
 

click me!