கோடைவெயிலுக்கு ஏற்ற குளு குளு ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி!

By Asianet TamilFirst Published Feb 25, 2023, 12:44 PM IST
Highlights

வாருங்கள்! சத்தான ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்
 

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த கொளுத்தும் வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள இளநீர், நீர்மோர், தர்பூசணி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ் என்று பல்வேறு நீர் ஆகாரங்கள் மற்றும் பல விதமான பழங்களை உணவாக எடுத்துக் கொண்டால் உடல் சூட்டை தணிக்கலாம். இந்த கோடைக் காலத்துக்கு ஏற்ற, உடலை குளிர்ச்சியாக வைக்கக் கூடிய தயிர் பச்சடி செய்ய உள்ளோம். தயிர் பச்சடியில் அல்லது புதுமை என்று யோசிக்கிறீர்களா? வழக்கமாக நாம் ஆனியன், கேரட், வெள்ளரிக்காய், புடலங்காய் போன்றவற்றை வைத்து பச்சடி வைத்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் அனைத்து விதமான பழங்களையும் சேர்த்து ஃப்ரூட்ஸ் பச்சடி ரெசிபியை செய்ய உள்ளோம்.
இந்த ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடியில் எல்லா விதமான பழங்களையும் சேர்த்து செய்வதால் ஒரு புது விதமான சுவையையும் வித்தியாசமாகவும் இருக்கும். இதனை செய்வதற்கு மிகக் குறைந்த நேரமே எடுத்துக் கொள்வதால் சட்டென்று செய்து முடித்திடலாம்.

வாருங்கள்! சத்தான ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

அன்னாசிப்பழம-1/4 கப்
ஆப்பிள்-1/4 கப்
மாதுளை விதை-1/4 கப்
திராட்சை -1/4 கப்
ஆரஞ்சு- 2
கொய்யா-1
பேரீச்சம்பழம்-3
செர்ரி-5
நாட்டுச்சர்க்கரை - 50 கிராம்
பால் - 50 மி.லி
கெட்டி தயிர் - 100 மி.லி
தேன் - 2 ஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
ஏலக்காய்த்தூள்-1 சிட்டிகை
லவங்கத்தூள் - 1 சிட்டிகை

பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு இந்த மாதிரி பட்டர் ஸ்காட்ச் புட்டிங் செய்து அசத்துங்க!
செய்முறை:

முதலில் அன்னாசிப்பழம், ஆரஞ்சு,மாதுளை பழங்களின் தோல் சீவி வைத்துக் கொள்ள வேண்டும். கொய்யா, ஆப்பிள், அன்னாசி போன்றவற்றை ஒரே மாதிரியான சிறு அளவில் வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். செர்ரி மற்றும் ஆரஞ்சு சுளைகளை இரண்டாக கட் செய்து கொள்ள வேண்டும். பேரிச்சையில் உள்ள விதைகளை எடுத்து பிய்த்து வைத்துக் கொள்ள வேண்டும். மாதுளையின் விதைகளை உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டுசர்க்கரையை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு சாஸ் பான் வைத்து பாலை காய்த்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.இப்போது ஒரு பௌலில் வெட்டி வைத்துள்ள அனைத்து பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதில் கெட்டி தயிர்,காய்ச்சிய பால்,பொடித்த நாட்டு சர்க்கரை மற்றும் தேன் ஆகியவை சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உப்பு, ஏலக்காய்த்தூள் மற்றும் லவங்கத்தூள் தூவி ஒரு முறை கிளறி பரிமாறனால் சத்தான சுவையான ஃப்ரூட்ஸ் தயிர் பச்சடி ரெடி!

click me!