பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு இந்த மாதிரி பட்டர் ஸ்காட்ச் புட்டிங் செய்து அசத்துங்க!

By Asianet Tamil  |  First Published Feb 24, 2023, 3:32 PM IST

வாருங்கள்! பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


பள்ளி முடித்து வரும் உங்கள் குட்டிஸ்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ஒரு ரெசிபியை காண உள்ளோம். வழக்கமாக செய்து கொடுக்கும் ஸ்னாக்ஸ் வகையில் இருந்து இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கும். பொதுவாக நாம் புட்டு,கொழுக்கட்டை, கட்லெட், சமோசா,வடை போன்றவற்றை அதிகமாக செய்து கொடுத்து இருப்போம். இதனையே அடிக்கடி சாப்பிட்டு குழந்தைகளுக்கும் அலுத்து போய் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பட்டர்ஸ்காட்ச் புட்டிங் செய்து பாருங்கள். மாலை நேரங்களில் சாப்பிட ஏற்ற ஒரு அசத்தலான ரெசிபி ஆகும். மேலும் குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.

வாருங்கள்! பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

பால் - 1 1/2 கப்
நாட்டுச் சர்க்கரை - 1/2 கப்
பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் - 1/4 கப்
கடல் பாசி - 5 கிராம்
பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் - 1/4 ஸ்பூன்
 

அஜீரண கோளாறுகளை சரி செய்யும் இஞ்சி சட்னி !

Tap to resize

Latest Videos

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் பாலை ஊற்றிக் கொள்ள வேண்டும். நாட்டு சர்க்கரையை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பாலில் பொடித்து வைத்துள்ள நாட்டு சர்க்கரையை சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி ஒரு சாஸ் பானில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

இப்போது பாலினை சிம்மில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். பால் ஓரளவு கெட்டியான பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விட்டு நன்றாக ஆற வைக்க வேண்டும். பால் ஆறிய பின் அதில் பட்டர்ஸ்காட்ச் எசன்ஸ் சிறிது ஊற்றி நன்றாக கிளறி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் கடல் பாசி சேர்த்து தண்ணீர் ஊற்றி சிம்மில் வைத்து கரைத்துக் கொள்ள வேண்டும்.

கடல் பாசி முற்றிலும் கரைந்த பின்னர் அதனை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும். இப்போது ஒரு மிக்சி ஜாரில் பட்டர்ஸ்காட்ச் சிப்ஸ் சேர்த்து அரைத்துகே கொள்ள வேண்டும். பின் அதனை கொதித்த பாலில் சேர்த்தநன்றாக மிக்ஸ் செய்து விட்டு பின் அதனில் கரைத்து வைத்துள்ள கடல் பாசியையும் ஊற்றி நன்றாக கலந்து விட வேண்டும்.

இப்போது ஒரு ட்ரேயில் ரெடி செய்துள்ள கலவையை ஊற்றி விட்டு ஸ்ப்ரெட் செய்து விட வேண்டும். பின் அதனை அலுமினிய சீட் போட்டு மூடி விட்டு , ஃப்ரிட்ஜில் சுமார் 1 மணிநேரம் வைத்து பின் அதனை ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து சுவையான பட்டர்ஸ்காட்ச் புட்டிங் ரெடி!

click me!