ஆரோக்கியத்தின் வரப் பிரசாதம் வாழைப்பூ பொரியல்!

By Asianet Tamil  |  First Published Feb 24, 2023, 4:26 PM IST

வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பூவில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனை தவிர வைட்டமின் , பி1 ,சி போன்ற சத்துக்களும் அதிக அளவில் காணப் படுகின்றன.  வாருங்கள் ! சத்தான சுவையான வாழைப்பூ பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
 


நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் அதிகளவில் காய்கறிகள் எடுத்துக் கொண்டால் நமது ஆரோக்கியம் சிறக்கும். ஒவ்வொரு காய்கறியும் தனித்துவதுமான சத்துக்களை கொண்டு இருக்கும். அந்த வகையில் அற்புத மருத்துவ சத்துக்களை உள்ளடக்கிய வாழைப்பூ வைத்து ஒரு சூப்பரான ரெசிபியை காண உள்ளோம். பொதுவாக நாம் அடிக்கடி கேரட், பட்டாணி, கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய் போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம்.

வாழைப்பூ துவர்ப்பு சுவை கொண்டிருந்தாலும் அளவற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. வாழைப்பூவில் இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனை தவிர வைட்டமின் ஏ, பி1 ,சி போன்ற சத்துக்களும் அதிக அளவில் காணப் படுகின்றன.  வாருங்கள் ! சத்தான சுவையான வாழைப்பூ பொரியல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ – 1
துவரம் பருப்பு - 50 கிராம்
மோர் - சிறிது
பெரிய வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய்த்துருவல் - 2 ஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
மல்லித்தழை -கையளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
 

Latest Videos

undefined

பள்ளி முடித்து வரும் குட்டிஸ்களுக்கு இந்த மாதிரி பட்டர் ஸ்காட்ச் புட்டிங் செய்து அசத்துங்க!

செய்முறை:

முதலில் வாழைப்பூவை நடுவில் இருக்கும் நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக அரிந்து வைத்துக் கொண்டு அதனை மோர் கலந்த தண்ணீரில் போட்டுக் கொள்ள வேண்டும். வெங்காயத்தை மிக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை கீறி வைத்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்பை கழுவி வைத்துக் கொள்ள வேண்டும்.

 அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் அலசி வைத்துள்ள துவரம் பருப்பை சேர்த்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து 3 விசில் வைத்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கடாயில் அரிந்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொண்டு,அதனை தண்ணீர் இல்லாமல் வடித்துக் கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு வாணலி வைத்து சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, சூடான பின் அதில் கடுகு சேர்த்து தாளித்து, பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட வேண்டும். பின் அதில் வாழைப்பூ மற்றும் வேக வைத்த துவரம் பருப்பு சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். இறுதியாக துருவிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பில் இருந்து இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறினால் சூப்பரான வாழைப்பூ பொரியல் ரெடி!

click me!