குளிர் காலத்திற்கு ஏற்ற சாக்லேட் மசாலா காபி செய்யலாம் வாங்க!

By Dinesh TGFirst Published Dec 1, 2022, 3:54 PM IST
Highlights

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பல உணவு வகைகள் இருந்தாலும், இந்த சாக்லேட் மசாலா காபியையும் ஒரு முறை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

தமிழகத்தில் ஆங்காங்கே குளிர்க்காலம் தொடங்கி பனி பொழிய ஆரம்பித்து விட்டது. இப்படி குளிர் காலங்களில் நமது உடலில் இருக்கின்ற நோய் எதிர்ப்பு திறன் சற்று குறைவாக இருக்கும். 

இதனால் எளிதில் நமக்கு உடல் நல பிரச்சனைகள் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு மிக விரைவில் தொற்றிக் கொள்ளும் சூழல் உருவாகிறது. ஆகையால் இந்த காலத்தில் குளிர்பானங்களை தவிர்த்தல் சிறந்தது ஆகும். அதற்கு பதிலாக சூடான பானங்களை எடுத்துக் கொள்ளலாம். 

அந்த வகையில், கொஞ்சம் டிபஃரென்டட்டாக சூடான மசாலா சாக்லேட் காபி செய்யலாம் வாங்க. மசாலா வடை, மசாலா டீ தெரியும். மசாலா காபியா என்று யோசிக்கிறீர்களா? நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த பல உணவு வகைகள் இருந்தாலும், இந்த சாக்லேட் மசாலா காபியையும் ஒரு முறை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். 

இந்த சாக்லேட் மசாலா காபி குடிப்பதால் சாக்லேட் சாப்பிட்ட திருப்தியும் அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இந்த காபியை மிக எளிமையாக அதே நேரத்தில் சூப்பராக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம். என்னங்க !இப்பவே செய்து சுவைக்கணும் போன்று உள்ளதா? வாங்க சூடான சாக்லேட் மசாலா காபி எப்படி செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

பால்- 2 கப் 
லவங்கம்-4
ஏலக்காய் -2
பட்டை 2 இன்ச் 
இனிக்காத கோகோ பவுடர்- 4 ஸ்பூன் 
சர்க்கரை- 2 ஸ்பூன் 
சாக்கோ சிரப்-2 ஸ்பூன் 

சுகர் உள்ளதா? அப்போ பாகற்காயை இப்படி செய்து சாப்பிடுங்க!

செய்முறை:

அடுப்பில் ஒரு டீ சாஸ் பான் வைத்து பால் ஊற்றி, அடுப்பின் தீயனை சிம்மில் வைத்து ,பாலை நன்றாக காய்த்துக் கொள்ள வேண்டும். இப்போது காய்ச்சிய பாலில் லவங்கம், ஏலக்காய் மற்றும் பட்டை ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். 

இப்போது பால் கொதித்து மசாலாக்களின் வாசனை வரும் போது , கோகோ பவுடர் மற்றும் சர்க்கரைஇரண்டினையும் சேர்த்து, கொஞ்சம் கலந்து விட வேண்டும். பின் இதனை ஒரு க்ளாசில் வடிகட்டி அதன் மேல் சாக்கோ சிரப் ஊற்றினால் சாக்லேட் மசாலா காபி ரெடி!!! அடிக்கும் குளிருக்கு இந்த காபியை சுட சுட சுவைத்தால் அருமையாக இருக்கும்.

இந்த காபியை ஒரு முறை செய்து பாருங்கள். வீட்டில் உள்ள அனைவரும் இதனையே தினமும் செய்து தரும்படி கூறுவார்கள். நீங்களும் ட்ரை பண்ணி குடும்பத்துடன் சுவைத்து மகிழுங்கள்.

click me!