இதனை பிடிக்காது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அபாரமாக இருக்கும். குறைவான விலையில் ருசியான டிஷ்களில் ஒன்று தான் இந்த தட்டு வடை செட் .வாருங்கள். சேலம் புகழ் தட்டு வடை செட் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
என்ன தான் மதிய உணவை வயிறு முட்ட சாப்பிட்டாலும், மாலை நேரங்களில் ஏதோ ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். மாலை சிற்றுண்டிகளான வடை, போண்டா, பஜ்ஜி, கட்லெட்,புட்டு, கொழுக்கட்டை என்றில்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்து சாப்பிடணும் என்று நினைக்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்காக தான் .
ஒவ்வொரு ஊர்களிலும் ஒவ்வொரு விதமான உணவுகள் பிரசித்தி பெற்று இருக்கும். அந்த வகையில் இன்று நாம் சேலம் புகழ் தட்டு வடை செட் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
சேலம் ரோட்டோர கடைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு சிற்றுண்டி என்றால் அதில் தட்டு வடை செட்டும் ஒன்றாகும். இந்த தட்டு வடை செட் வாங்கி சுவைக்க தனி கூட்டமே உள்ளது.இதனை பிடிக்காது என்று எவரும் சொல்ல மாட்டார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை அபாரமாக இருக்கும். குறைவான விலையில் ருசியான டிஷ்களில் ஒன்று தான் இந்த தட்டு வடை செட் .வாருங்கள். சேலம் புகழ் தட்டு வடை செட் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
தட்டை -10
பீட்ரூட்-1
கேரட் 1
வெங்காயம்-1
கார சட்னி -1/4 கப்
புதினா சட்னி -1/4 கப்
மாங்காய் -1/2
சாட் மசாலா-2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்
மல்லித்தழை- கையளவு
உப்பு -தேவையான அளவு
சுகர் உள்ளதா? அப்போ பாகற்காயை இப்படி செய்து சாப்பிடுங்க!
செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் மல்லித்தழையை நன்றாக பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் கேரட், பீட்ரூட்,மாங்காய் ஆகியவற்றை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். துருவிய காய்களை 1 சின்ன பவுளில் மாற்றிக் கொண்டு, நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அடுத்து அந்த பௌலில் சிறிது உப்பு தூவி பின் லெமன் சாறு பிழிந்து மீண்டும் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு தட்டை எடுத்து அதன் மேல் சிறிது காரச் சட்னி பரப்பி விட வேண்டும். பின் பௌலில் இருக்கும் காய்கறி கலவையை வைத்து பரப்பி விட வேண்டும். பிறகு இந்த காய்கறி கலவை மீது பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் துருவிய மாங்காய் வைத்து பரப்பி விட்டு, பின் அதன் மேல் 1 சிட்டிகை சாட் மசாலா தூள் தூவி விட வேண்டும்.
சாட் மசாலா தூவிய பிறகு, அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித் தழையை தூவி பின் அதன் மேல் புதினா சட்னி வைத்து பரப்பி அதன் மேல் மற்றொரு தட்டையை வைத்து மூடி விட்டால், சூப்பரான சுவையில் காரசாரமான சேலம் தட்டு வடை ரெடி!!