இன்று சற்று மாற்றாக சத்து மாவு வைத்து பர்பி செய்யலாம். இந்த பர்பியை காற்று புகாத டப்பாவில் வைத்து ஒரு 4-5 நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம்.
பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் பாக்ஸில் தினமும் பழம் அல்லது பிஸ்கட் போன்றவற்றை கொடுத்து அனுப்பி அலுத்து விட்டதா? ஸ்னாக்ஸ் பாக்ஸிற்கு சத்தான ஒரு உணவு தர வேண்டும் என்று எண்ணுபவரா நீங்கள்?
ஹெல்த்தியான ஒரு ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்றால் இதனை ஒரு முறை செய்து பாருங்க. வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சத்து மாவு பர்பி. இதனை சுவையாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
undefined
வழக்கமாக சத்து மாவு வைத்து புட்டு, கொழுக்கட்டை, மால்ட், கூழ் ,களி போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று சற்று மாற்றாக சத்து மாவு வைத்து பர்பி செய்யலாம். இந்த பர்பியை காற்று புகாத டப்பாவில் வைத்து ஒரு 4-5 நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
சத்து மாவு -1 கப்
வெல்லம் -1 1/2 கப்
கடலை மாவு- 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 2 ஸ்பூன்
பிஸ்தா- 1 ஸ்பூன்
முந்திரி-1 ஸ்பூன்
பாதம்- 1 ஸ்பூன்
நெய்-1/2 கப்
காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி எப்படி செய்வது ? பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
முதலில் சத்து மாவை எடுத்துக் கொண்டு அதனை ஒரு சல்லடையில் போட்டு சலித்து கொண்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். சலித்த மாவினை 1 பவுளில் எடுத்துக் கொள்ள வேண்டும். முந்திரி, பிஸ்தா,பாதம் ஆகியவற்றை பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் கடாய் வைத்து தீயை சிம்மில் வைத்து நெய் சேர்த்து சூடேற்ற வேண்டும்.நெய் உருகிய பிறகு, அதில் சலித்து வைத்துள்ள சத்து மாவினை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.
சத்து மாவு கொஞ்சம் வெந்து நன்றாக வாசனை வரும் போது,கடலை மாவு சேர்த்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். மாவுகள் நன்றாக வெந்து தண்ணீர் பதத்திற்கு வரும் போது எடுத்து வைத்துள்ள வெல்லம் சேர்த்து மீண்டும் நன்றாக கிளறி விட வேண்டும். வெல்லம் மாவுகளோடு சேர்ந்து நன்றாக கலந்த பின் அதில் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது கலவை கடாயில் ஒட்டாமல் இருக்க தொடர்ந்து கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின் கலவை அல்வா பதத்திற்கு வரும் போது அடுப்பை ஆஃப் செய்து விட வேண்டும்.
ஒரு பெரிய தட்டில் எண்ணெய் தடவி அதில் இந்த கலவையை போட்டு ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அதன் மேல் பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்றவற்றை தூவி விட வேண்டும். கலவை நன்றாக ஆறிய பிறகு, ஒரு கத்தி வைத்து விருப்பமான வடிவத்தில் வெட்டிக் கொண்டால் சுவையான சத்து மாவு பர்பி ரெடி!!!