KFC சிக்கன் பிரியரா நீங்கள்? வெளியில் அடிக்கடி சென்று சாப்பிட்டால் பட்ஜெட் பத்தாதே, என நினைப்பவரா நீங்கள்? இதோ உங்களுக்கான பதிவு தான் இது. க்ரிஸ்பியான KFC சிக்கன் பாப் கார்ன் நமது வீட்டிலே செய்வது எப்படி என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்கள் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றால் பெரும்பாலும் சிக்கன் தான்.அதிலும் குறிப்பாக KFC சிக்கனுக்கென்று ஒரு பெரிய பட்டாளமே அடிமை எனவும் கூறலாம். அத்தகைய KFC சிக்கனை வெளியில் சென்று சாப்பிட எண்ணம் இருப்பினும், விலை மிகவும் காஸ்ட்லியாக இருப்பதால் அளவோடு தான் சாப்பிட முடியும் மேலும் ஆர்டர் செய்து சிறிது நேரம் காத்திருந்து தான் சாப்பிட வேண்டும். அதனையே நம் வீட்டிலியே செய்தால் சுலபமாகவும் மற்றும் அதிகமாகவும் சாப்பிடலாம்.
சரிங்க நான் -வெஜ் பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த க்ரிஸ்பி KFC சிக்கன் பாப் கார்ன் எப்படி செய்யலாம்? பார்க்கலாம் வாங்க!
தேவையான பொருட்கள்:
வெஜ்... நான் வெஜ்.... இரண்டிற்கும் சுவையான பிளைன் சால்னா! செய்வோமா?
போன் லெஸ் சிக்கன் - 1/4 கி
முட்டை - 1
மைதா மாவு – கையளவு
சோள மாவு - கையளவு
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
மிளகுப் பொடி -1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
செய்முறை :
எலும்பில்லாத சிக்கனை ஓடும் நீரில் நன்கு அலசி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.ஒரு கிண்ணத்தில் மைதா, சோள மாவு , மிளகாய் பொடி மற்றும் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டை ஒன்றை உடைத்து ஒரு கப்பில் ஊற்றி நன்கு கலந்து அடித்து வைத்துக் கொள்ளவும்.
சிக்கனில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையம் சேர்த்து பிரட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். சுமார் 30 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
மற்றொரு கிண்ணத்தில் மைதா மாவு மற்றும் சோள மாவு (உப்பு சேர்க்காமல்)கலந்து வைத்துக் கொள்ளவேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கனை, கிண்ணத்தில் வைத்துள்ள மாவில் நன்கு பிரட்டி எடுக்க வேண்டும்.
கமகமக்கும் நெத்திலி மீன் கருவாட்டு ரசம்! செய்வோமா?
பிறகு அதனை முட்டையில் டிப் செய்தபின் உப்பு, மிளகாய் பொடி சேர்த்து கலந்த மாவில் பிரட்டி எடுத்து கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு அகன்ற கடாய் வைத்து கொஞ்சம் என்னை ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு, தீயை மிதமாக வைத்து சிக்கனை போட்டு, பொரித்து எடுக்கவும். அவ்ளோதாங்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து அசைவ பிரியர்களுக்கும் விருப்பமான KFC சிக்கன்
சுவையான பாப்கார்ன் சிக்கன் ரெடி!!