Dry Fish Rasam ; கமகமக்கும் நெத்திலி மீன் கருவாட்டு ரசம்! செய்வோமா?

By Dinesh TG  |  First Published Oct 11, 2022, 2:17 PM IST

கருவாடு ரசம் செய்தால் அடுத்த தெரு வரை அதன் வாசம் ஆளை தூக்கும் வகையில் கமகமக்கும். சரி, இந்த  நெத்திலி மீன் கருவாட்டு குழம்பை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.


மிளகு ரசம், தக்காளி ரசம், லெமன் ரசம் செய்து சுவைத்து இருப்போம். கருவாடு ரசம் செய்துள்ளீர்களா? கருவாட்டை வைத்து தொக்கு, பொரியல், வறுவல் ,குழம்பு என பல வகையான உணவு வகைகளை செய்யலாம். இன்று நாம் கருவாடை வைத்து கருவாட்டு ரசம் செய்வது எப்படி இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

கருவாடு ரசம் செய்தால் அடுத்த தெரு வரை அதன் வாசம் ஆளை தூக்கும் வகையில் கமகமக்கும். சரி, இந்த  நெத்திலி மீன் கருவாட்டு குழம்பை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.

Tap to resize

Latest Videos

தேவையான பொருட்கள்:

கருவாடு - 5 துண்டுகள் 
வெங்காயம் - 1 பெரியது

சுவையான கேரள வாழை இலை மீன்! செய்வது எப்படி?

தக்காளி - 2 பெரியது
பச்சை மிளகாய் - 1 
வர மிளகாய் - 4 
இஞ்சி - சிறு துண்டு
மிளகு - 2 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன் 
புளி - நெல்லிக்காய் அளவு
தனியா தூள் - 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன் 
பூண்டு - 10 பல் 
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு 
கொத்தமல்லி - 1 கையளவு 
கறிவேப்பிலை - ஒரு கொத்து 

செய்முறை: 

கருவாட்டை நன்றாக அலசி சுத்தம் செய்த பின் சிறிது மிளகாய் தூள் சேர்த்து சுமார் 10 நிமிடங்கள் ஊற வைத்து விடுங்கள். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்த உடன் , கருவாட்டை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் வறுத்த கருவாட்டை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும்.

Egg 65 : சிக்கன் 65 தெரியும். முட்டை 65! தெரியுமா?

1 மிக்ஸி ஜாரில் மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அதனுடன் 1 தக்காளி மட்டும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணய் சேர்த்து , எண்ணெய் சூடானவுடன் கடுகு, வர மிளகாய் சேர்த்து தாளித்த பின்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கவும். பச்சை வாசனைசென்ற பின் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, வெங்காயம் மற்றும் மற்றொரு தக்காளி போட்டு வதக்கவும். 

வெங்காயம், தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி விட்டு பின்னர் புளி தண்ணீரை ஊற்ற வேண்டும். பின்பு அதில் வறுத்து வைத்துள்ள கருவாடு துண்டுகளை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்போது கருவாடு வெந்து நன்றாக கொதித்து , வாசனை வரும்போது கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும். 

அருமையான மற்றும் கமகமக்கும் கருவாட்டு ரசம் தயார். 

click me!