Punjabi Bhature : பஞ்சு போல் இருக்கும் பஞ்சாபி ஸ்பெஷல் பட்டூரே!

By Dinesh TGFirst Published Oct 11, 2022, 5:05 PM IST
Highlights

வட இந்தியர்கள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சென்னா பட்டூரே மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான உணவு வகை. இன்றைய பதிவில் பட்டூரே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பட்டூரே என்றழைக்கப்படும் மைதா பூரி வட இந்தியாவின் பிரசித்தி பெற்ற, குறிப்பாக பஞ்சாபில் மிகவும் பேமஸ் ஆன ஒரு உணவு வகை. இந்த பட்டூரே பூரி செய்ய தயிர் மற்றும் மைதா சேர்க்கப்படுகிறது. தயிர் சேர்த்து செய்வதால் இதன் சுவை பொதுவாக செய்யும் பூரியை விட சுவையில் சிறிது மாற்றம் இருக்கும். 

மேலும் இது மிக சாஃப்டாக இருப்பதால் வாயில் வைத்த உடன் கரையும் அளவிற்கு மிகுந்த சுவையாக இருக்கும். இதற்கு சென்னா மசாலா என்று கூறும் கொண்டைகடலை குருமா உடன் வைத்து சாப்பிட்டால் வேற லெவலாக இருக்கும்.

வட இந்தியர்கள் இதனை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சென்னா பட்டூரே மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான உணவு வகை. இன்றைய பதிவில் பட்டூரே செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

பஞ்சாபி பட்டூரே செய்ய தேவையான பொருட்கள்:

மைதா-1 1/2 கப் 
பட்டர் -1/4 கப் 
கெட்டி தயிர் -1/4 கப் 
சமையல் சோடா -1/4 ஸ்பூன் 
சர்க்கரை -1 ஸ்பூன் 
தேவையான அளவு - உப்பு 
தேவையான அளவு - எண்ணெய்

செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தில் 1 1/2 கப் மைதா, 1/4 கப் தயிர், 1/4 கப் பட்டர், ஒரு சிட்டிகை சமையல் சோடா, தேவையான அளவு உப்பு மற்றும் 1 ஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மென்மையாக மாவு பிசைந்து வைத்து கொள்ளவும். பின் பிசைந்து வைத்துள்ள மாவை ஒரு ஈரத்துணியை கொண்டு மூடி சுமார் 1 மணி நேரமாவது ஊற வைக்கவேண்டும். ஒரு மணி நேரம் ஆன பிறகு, மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவேண்டும்.

வித்தியாசமான முறையில் உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு!

பின் சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் அதனை பூரி போன்று திரட்டி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி , எண்ணெய் நன்கு காய்ந்த உடன் , தயாராக திரட்டி வைத்துள்ள பூரிகளை ,மிதமான தீயில் வைத்து எண்ணெயில் போட்டு பொரித்துஎடுத்துக் கொள்ள வேண்டும்.

பூரி உப்பிய பின் மறு பக்கம் திருப்பி போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் எண்ணெயை வடித்து விட்டு எடுக்கவும், சூடான சுவையான மற்றும் சாஃப்டான பஞ்சாபி பட்டூரே தயார்.!!! நீங்களும் வீட்டில் இதனை ட்ரை பண்ணி பாருங்க. அனைவரும் விரும்பி சாப்பிடும் விதமாக இருக்கும் இதன் சுவை.

click me!