Cheese Pasta : 10 நிமிடங்களில் சுவையான சீஸ் பாஸ்தா செய்வோமா?

By Dinesh TG  |  First Published Oct 12, 2022, 2:32 PM IST

உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.


தினமும் இட்லி, தோசை, பூரி,பொங்கல் என செய்து அலுத்து விட்டதா?உங்களுக்கும் உங்க குழந்தைகளுக்கும் டிஃபரென்ட்டா எதையாவது செய்யலாம்ன்னு யோசிக்கிறீங்களா? அப்போ உங்களுக்கான பதிவா தான் இது இருக்கும். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு பாஸ்தா பிடிக்குமா?அப்படியென்றால் இன்று உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு சீஸ் பாஸ்தா செய்து கொடுங்கள். இந்த சீஸ் பாஸ்தாவை எப்படி சுலபமாக மற்றும் சுவையாக செய்வது இன்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம். 

பாஸ்தாவில் பல வகை இருந்தாலும் , சீஸ் பாஸ்தா சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சுவையாக இருக்கும், இதனை எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க!

Latest Videos

undefined

சீஸ் பாஸ்தா செய்ய தேவையான பொருட்கள்: 

250 கிராம் -பாஸ்தா 
4- தக்காளி (பொடியாக நறுக்கியது)
3- காய்ந்த மிளகாய் 
5 பல்- பூண்டு (பொடியாக நறுக்கியது) 

Water with Tea : டீ , காபிக்கு முன்பாக தண்ணீர் குடித்தால் என்ன பலன் கிடைக்கும்? நிபுணர்கள் விளக்கம்!

1ஸ்பூன் 
1ஸ்பூன் - உலர்ந்த கற்பூரவள்ளி இலை அல்லது ஆரிகானோ 
1/2 கப் - பால் 
1ஸ்பூன் - சர்க்கரை 
1/2 கப்- சீஸ் (துருவியது) 
4 ஸ்பூன் -கொத்தமல்லி - 
1 ஸ்பூன்- ஆலிவ் ஆயில் 
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அடுப்பில் ஒரு கடாய் வைத்து தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்த பின், தண்ணீரில் பாஸ்தா மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்ட வேண்டும்.பின் அதனை , குளிர்ந்த நீரில் போட்டு அலசி வடிகட்டிய பின் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மிக்சி ஜாரில் நறுக்கிய தக்காளி மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு மை போன்று அரைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து அடுப்பில் ஒரு Pan வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , பூண்டு, மற்றும் ஆரிகனோ சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி பின் அரைத்த தக்காளி விழுதை ஊற்றி,சிறிது உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். எட்டு முதல் பத்து நிமிடங்கள் வரை பச்சைவாடை போகும் வரை நன்றாக வேக விட வேண்டும். 

Chicken Popcorn : நான்-வெஜ் பிரியர்களுக்கு பிடித்த க்ரிஸ்பியான KFC பாப் கார்ன் சிக்கன் வீட்டிலேயே செய்யலாமா?

பின் அதில் சிறிது பால் சேர்த்து கிளறி விட்டு , வேக வைத்து எடுத்துள்ள பாஸ்தாவை உடனே சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்.  இறுதியில் துருவிய சீஸ் மற்றும் கொத்தமல்லியைத் தூவி கொஞ்சம் கிளறி விட்டு இறக்கி சூடாக பரிமாறினால், சுவையான சீஸ் பாஸ்தா தயார்! ட்ரை பண்ணி பாருங்க! 

click me!